கோவை: அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீபாவளிக்கு மகளிர்க்கு சேலை வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் தொகுதி, சூலூர் தொகுதியில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, கோவையில்
அதிமுக ஆட்சியில் 3 சிப்ட் தொழிலாளர்கள் பணி புரிந்தனர், ஆனால் தற்போது ஒரு சிப்ட் தான் தொழில் நடைபெறுகிறது இதனால் தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். அடுத்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தொழில் பெருகும் என்றார்.
திமுக ஆட்சியில் SIHS காலனி மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது என்றும் அதிமுக ஆட்சியில் விரைந்து அந்த பணிகள் முடிக்கப்படும் திமுக ஆட்சி அமைந்து 52 மாதங்களில் ஏதாவது ஒரு பெரிய திட்டங்களை கொண்டு வந்துள்ளார்களா? என கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் நீங்கள் கேட்ட இடத்தில் பாலங்கள் கட்டி கொடுக்கப்பட்டது,
அதிமுக ஆட்சியில் மீண்டும் விமான நிலைய விரிவாக்க பணி துவங்கப்பட்டு முடிக்கப்படும் விமான நிலையம் பெரிதானால் தான் தொழில் வளம் பெருகும் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.
தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட உயர்மட்ட பாலம் உள்ளது கோவையில் தான் என்றும்
1950 கோடி மதிப்பில் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது, இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் அதிமுக திட்டங்கள் வரபிரசாதமாக தெரியும் என்றார்.
இதே போன்று 114 கோடி மதிப்பில் ஒரே நேரத்தில் 17,000 பேர் பணியும் ஐடி பார்க் துவங்கப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான்
வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் தவறாக கருத்துகளை பரப்பி வருகிறார் என சாடினார். கோவை வளர்ந்து வரும் மாநகரம் என்பதால் மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது ஆனால் இன்று திமுக ஏதேதோ சொல்லி முடக்கி விட்டார்கள்
அதிமுக ஆட்சியில் மெட்ரோ திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.
திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என கூறிய அவர் அதிமுக திட்டங்களுக்கு தான் அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்றார்.
சட்டத்தின் ஆட்சி அதிமுக ஆட்சியில் தான் நடந்தது, இன்று சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது, சட்டத்தின் ஆட்சி மீண்டும் நடைபெற அனைவரும் துணை நிற்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
இன்று பல்வேறு ரூபங்களில் போதைபொருள் நடமாட்டம் உள்ளது
இது குறித்து பல்வேறு வழிகளில் திமுக அரசுக்கு கூறினோம் ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை போதையின் பாதையில் செல்லாதீர்கள் என முதல்வர் தற்போது கூறுகிறார், ஆனால் நாங்கள் சட்டமன்றத்தில் பேசும் போதே நடவடிக்கை எடுத்திருந்தால் அதனை தடுத்திருக்கலாம்
இப்படிபட்ட முதல்வர் வேண்டுமா?
காவலருக்கே தற்போது பாதுகாப்பு இல்லை, 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்
மக்கள் மக்கள் தான் காப்பாற்ற வேண்டி உள்ளது, முதியோர்களை குறிவைத்து கொலை நடைபெறுகிறது ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தி இருந்தால் இது தடுக்கப்பட்டிருக்கும் என்றார்.
இன்று பல்வேறு வரிகள் உயர்ந்துள்ளது
கரண்ட்டை தொட்டால் தான் சாக் அடிக்கும் ஆனால் இந்த ஆட்சியில் கரண்ட் பில்லை பார்த்தாலே சாக் அடிக்கிறது ,இதனால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகிறது
இந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள், தொழில்களை பற்றி கவலை இல்லை
ஆனால் அவர்களது குடும்பத்தை பற்றி பார்ப்பார்கள் என்றார்.
இது திமுக கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி ஆகிவிட்டது, வாரிசு அரசியல் தொடர வேண்டுமா? அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வர் ஆகலாம் என்றார்.
கொரொனா காலத்தில் சரியான நடவடிக்கை எடுத்து உயிரை காப்பாற்றியது அதிமுக
மக்கள் துன்பப்படும் போதெல்லாம் உதவி செய்த அரசு அதிமுக அரசு, மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றார்.
திமுக ஆட்சியில் கட்டிடம் கட்டும் ஆசையே வராது ஜல்லி, கம்பி, சிமெண்ட், செங்கல், மரம், என அனைத்து கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது
அனைத்திலும் கமிஷன் வருவதால் அவர்கள் கண்டு கொள்வதில்லை, வீடு கட்ட வேண்டுமென்றால் கனவில் கட்டிகொள்ளலாம், நிஜத்தில் கட்ட முடியுமா? என்றார்.
ஜெயலலிதா இருக்கும் போது பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தோம்
இந்த அரசு அதனை ரத்து செய்துள்ளது, அதிமுக ஆட்சி வந்தவுடன் மீண்டும் லேப்டாப் வழங்கப்படும், ஏழை மக்கள் பலரும் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் அதிமுக ஆட்சியில் புற்றுநோய் கண்டறியும் கருவியை நிறுவி சிகிச்சை அளித்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம் என்றார்.
கோவையில் சிகிச்சை பெற்று வந்த தந்தையை மகன் தோலில் சுமந்து இழுத்து செல்கிறார் இந்த ஆட்சியில் வீல்சேர் கூட வைக்கவில்லை
இதனால் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றார். அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை சிறப்பாக இருந்தது திமுக ஆட்சியில் கால்பந்து வீராங்கனை காலில் அடிப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர் இறந்து போனார் என தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் ஏழைகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்படும் இது எங்கள் தேர்தல் அறிக்கையாக வைத்துள்ளோம், தீபாவளிக்கு மகளிருக்கு சேலை வழங்கப்படும், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் புதிய ஆட்டோ வாங்க மானியமாக 75,000 வழங்கப்படும் என்றார்.
அடுத்த தேர்தலில் வேட்பாளர் க்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்