பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல்- ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…

கோவை: பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில், கோவை போக்சோ (POCSO) நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த கொடூர சம்பவம், சீர நாயக்கன் பாளையம், ஐஸ்வர்யா நகர் பகுதியில் 2019 ம் ஆண்டு நடைபெற்றது.

பதினொன்றாம் வகுப்பு படித்த மாணவியை ஏழு பேர் இணைந்து கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர்.

இது தொடர்பாக போலீசார் மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ மணிகண்டன், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி மற்றும் கார்த்திகேயன் ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு, கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற விசாரணை முடிவில், நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு வழங்கினார். அதில், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஏழு பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தீர்ப்பு, சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களில் கண்டிப்பான நடவடிக்கைக்கு எடுத்துக் காட்டாக அமைந்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp