அரையாண்டு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு; மாணவர்கள் உற்சாகம்

கோவை: கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 600க்கும் மேற்பட்ட உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

மேலும் 1,200-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த மாதம் மாணவா்களுக்கு அரையாண்டு தோ்வு முடிவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் விடுமுறை முடிந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி முன்கூட்டியே பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பள்ளிகளில் மாணவா்கள் படிப்பதற்கான அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து மாணவர்கள் இன்று காலை உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பர்களை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். கட்டி தழுவி கொண்டனர்.
சில மாணவர்கள் 1 மணி நேரத்துக்கு முன்பே பள்ளிக்கு வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து திறக்கப்பட்டது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மாணவா்களுக்கு வழங்கப்படும்.

பள்ளிகளில் கடந்த வாரமே தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Recent News

Video

Join WhatsApp