கோவை: கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணிகள் துவங்கியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணிகள் துவங்கி உள்ளது.
இதற்காக பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் இல்லங்களுக்கு நேரடியாக செல்லும் அலுவலர்கள் தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். வாக்காளர்கள் இல்லங்களுக்கு செல்லும் அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்தும் முறையை முழுமையாக எடுத்துரைத்து வாக்குகளை பதிவு செய்து பத்திரமாக எடுத்துச் செல்கின்றனர்.
கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 160 க்கும் மேற்பட்ட குழுக்கள் இதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது 9000 மேற்பட்ட வாக்காளர்கள் இதற்காக பதிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


