கோவை: ஓட்டு கேட்க சென்ற செந்தில் பாலாஜிக்கு பொதுமக்கள் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராமநாதபுரம் பகுதியில், கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக களம் காணும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், பழுதடைந்த சாலைகள் மற்றும் சுத்தம் செய்யப்படாத சாக்கடைகளை சுட்டிக்காட்டி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
“ஓட்டு கேட்க மட்டும் வர்றீங்க… எங்க ஏரியா ரோடு எப்படி இருக்கு நீங்களே பாருங்க… தண்ணி எப்படி போகுது பாருங்க…” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்காமல் செந்தில் பாலாஜி அங்கிருந்து விரைவாக நகர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், அந்த பெண் கேள்வி எழுப்பிய போது அருகில் இருந்த திமுகவினரே சிரித்தது, இந்த நிகழ்வை மேலும் பேசுபொருளாக மாற்றியுள்ளது.


