செந்தில்பாலாஜி வேட்புமனு ஏற்பிற்கு ஆட்சேபனை…

கோவை: செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு நாம் தமிழர் மற்றும் அதிமுகவினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்

முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு நாம் தமிழர் மற்றும் அதிமுகவினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. அதன்படி கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி திமுக வேட்பாளராக களம் காண்கிறார். நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று தமிழக முழுவதும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது மற்றும் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் முடிவெடுத்து வருகின்றனர். அதன்படி கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளர் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் செந்தில்குமார் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கும் பொழுது செந்தில் பாலாஜி வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவித்த நிலையில் அங்கிருந்த நாம் தமிழர் மற்றும் அதிமுக கட்சியினர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். நோட்டரி சர்டிபிகேட் ஆவண எண் ஆகியவை முறையாக இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டிய நிலையில் அனைத்து ஆவணங்களும் சரியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் சந்தேகம் ஏதேனும் இருந்தால் எழுத்துப்பூர்வமாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து இரண்டு கட்சியினரும் எழுத்துப்பூர்வமாக மனு அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன், செந்தில் பாலாஜியின் வேட்புமனுவில் இரண்டு மூன்று தவறுகள் இருந்ததாகவும் அவர் 4ம் நோட்டரி வாங்கிய நேரத்தில் கோவையில் இருந்ததாகவும் ஆனால் கரூரில் நோட்டரி வாங்கியதாக குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். பல்வேறு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களில் சிறிய தவறுகள் இருந்தாலே நிராகரிக்கப்படுகிறது என்றும் அதே சமயம் கரூரில் இருந்து சுயேட்ச்சையாக திமுகவினரே களம் இறக்கப்பட்டுள்ளனர் அவர்கள் வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.

நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அதிமுகவினரும் முன் வைக்கின்றனர் ஆனால் தேர்தல் அதிகாரிகள் அதனை காது கொடுத்து கூட கேட்பதில்லை என்று குற்றம் சாட்டிய அவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கும்படி கூறி விட்டார்கள் என்று தெரிவித்து விட்டதாக கூறினார். மேலும் நாங்கள் முறையிடும் பொழுது அங்கிருந்த திமுகவினர் தங்களை மிரட்டும் துணியில் பேசியதாகவும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு நடக்கிறது என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதாக குற்றச்சாட்டு… காவலர் மீது இளைஞர் புகார்…!

ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர் போலீசாரை பார்த்து பைக்கை திருப்பிய நிலையில், காவலர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...