கோவை: கோவையில் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலுமிச்சம்பட்டி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவர் நேற்று கோவைப்புதூர் பகுதியில் நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், எங்களிடம் அழகான இளம்பெண்கள் உள்ளனர். நீங்கள் பணம் கொடுத்தால் அவர்களிடம் உல்லாசம் அனுபவிக்கலாம், போலீஸ் தொந்தரவு கிடையாது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த வாலிபர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது கோவைப்புதூர் காமாட்சி நகரில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் புரோக்கர்கள் சேலம் அழகாபுரத்தை சேர்ந்த முருகன் (29), போத்தனூர் மேட்டூர் அன்னபுரத்தை சேர்ந்த சங்கீதா (30), அசாம் கோல்பராவை சேர்ந்த மல்லிகா (25) மற்றும் ஈரோடு சென்னிமலையை சேர்ந்த எம்ஜிஆர் நகரை சேர்ந்த சுகன்யா (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான ஸ்ரீ என்பவரை தேடி வருகின்றனர்.




