திமுக ஆட்சியிலும் SIR நடந்துள்ளது- கோவையில் நிர்மலா சீதாராமன் கூறிய தகவல்…

கோவை: திமுக ஆட்சியில் இருந்த போதும் SIR நடந்துள்ளது என்றும் அப்போது ஏன் அதனை எதிர்க்கவில்லை என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலிபாளையம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஜி.எஸ்.டி குறைப்பால் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றார் வணிகர்களும் நேரடியாக பயன்பெற்றுள்ளனர் என்றும் மோடியையும், என்னையும் வாழ்த்த வேண்டும் என கேட்டதால் கோவைக்கு வருகை வந்துள்ளேன் என்றார்.

இன்று தமிழ்நாடு முழுவதும் SIRக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் நடத்துவது ஆச்சரியம் அளிக்கிறது என்றும் சுமார் 60 ஆண்டுகளாக உள்ள கட்சிக்கு SIR பாஜக எடுத்து வந்தது போல் பேசுகின்றனர் என்றார். 13 முறை மட்டுமே SIR நடத்தப்பட்டதாக கூறிய அவர் அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக, இப்போது போராட்டம் நடத்துவது எதற்கு? என கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டு, மக்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல் தான் எஸ்.ஐ.ஆர் என கூறியுள்ளார், அவரது வீடியோவின் சாராம்சம் இதுதான் என்ன சொல்கிறோம் என புரியாமல் பேசுகிறார் என விமர்சித்தார். ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாக நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் இது அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளது என்றும் இதை தெரிந்து கொண்டு பேச வேண்டிய துணை முதல்வர் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்றார். திமுக இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த போது இதை ஏன் அதை எதிர்க்கவில்லை என்றும் தங்களின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க திமுக இது போன்ற நிலைப்பாட்டை எடுத்துவருவதாக கூறினார். எதிர்க்கட்சிகளோ பாஜகவோ வெற்றி பெற்றால் EVM இயந்திரங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர் என்றார்.

ஒரு இடத்தில் கூட வருமான வரித்துறை நடவடிக்கை தவறாகவில்லை என்றும் நாட்டில் 13 முறை நடந்த SIRயை எதிர்க்கவில்லை என்றும் தெரிவித்தார். தேர்தல் நடப்பது பீகாரில் ஆனால் ராகுல் காந்தி அரியானாவில் வோட்சோரி என்கிறார் என்றும் 4379 போலி வாக்காளர்கள் கொளத்தூர் தொகுதியில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் 933 வாக்காளர்கள் போலி முகவரியில் உள்ளனர், ஒரே பேரில் 3 வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளார் என்று கூறிய அவர் இதையெல்லாம் வைத்துதான் நீங்கள் வெற்றி பெற்றீர்களா என்றார்.

CSTS என்ற அமைப்பு தங்களின் SIR, ஆய்வு சரியில்லை எனக்கூறிவிட்ட பிறகும் அதை ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் பேசிக்கொண்டிருக்கிறார் என்றார். ஆர்டிக்கள் 324,329 வெளிப்படையாக தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது என்றும், திமுக கூட்டணி கட்சிகள் இந்திய அரசியலமைப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்றார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை பலமிழக்க வைக்காதீர்கள் என்கிறோம்.

டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது என்றும் ஓட்டுரிமை யாருக்கும் போகாது அனைத்து ஆவணங்களுக்கும் மாற்று ஆவணங்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். வீட்டிற்கே பி.எல்.ஓ வருவார் கிராம மக்கள் அலைய வேண்டியதில்லை என்றும் அனைத்து வரிகளும் சிஸ்டமேட்டிக்காக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும் பாஜக எந்த கட்சியின் உள்விவகாரங்களிலும் தலையிடாது என்றார்.

Recent News

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp