இனியாவது செய்யுங்க… கோவை ஜிடி மேம்பாலத்தை பார்வையிட்ட எஸ்.பி.வேலுமணி பேட்டி!

கோவை: மீதமுள்ள நாட்களிலாவது நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என திமுக அரசை எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

கோவை அவினாசி சாலையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த ஜி டி மேம்பாலத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று பார்வையிட்டார் அப்போது பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணியை வாழ்த்தி அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அவினாசி சாலையில் இருந்த நெரிசலால் மக்கள் அவதியடைந்ததால் மேம்பாலம் வேண்டுமென்று எடப்பாடியாரிடம் கோரிக்கை வைத்தோம். அப்போது
மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்க வேண்டியிருந்தது. முழு நிதியையும் அவர் ஒதுக்கித் தந்தார். அதிமுக ஆட்சியில் 55 சதவீதம் பாலப்பணிகள் நிறைவு செய்யப்பட்டது.

1621 கோடிக்கு மாநில அரசின் நிதியுடன் நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஒன்றரை ஆண்டுகள் பணி செய்யவில்லை. காலதாமதம் செய்து பாலத்தை திறந்துள்ளனர். கோவையில் உள்ள கடுமையான நெரிசலை கட்டுபப்டுத்த மேம்பாலங்கள், சாலைகள் கட்டுமானம் தந்தது எடப்பாடியார் தான்.

எஸ்ஐஹெச்எஸ் காலனி பாலத்தை இன்னும் இந்த அரசு முடிக்காமல் உள்ளது. அவினாசி மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டப்பட்டது எங்களுக்கு சந்தோசம் தான். அவர் கோவையின் அடையாளம்.

கோவைக்கு 4.5 ஆண்டுகளாக எதுவும் திமுக அரசு அறிவிக்கவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டத்தை தான் தொடர்ந்து முதல்வர் திறந்து வைத்து வருகிறார்.
திறக்கப்பட்டுள்ள பாலத்தில் வேககட்டுப்பாட்டு கேமரா பொருத்த வேண்டும்.
முறையாக டைவர்சன் செய்து விபத்தில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

Advertisement

இருக்கின்ற காலத்திலாவது, சரவணம்பட்டி பாலத்துக்கு நிதி, அவினாசி அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்க நிதி போன்ற நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு இந்த அரசு நிதி ஒதுக்க வேண்டும்.” என்றார்.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...