ரம்ஜானை முன்னிட்டு கோவையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கோவை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இம்மாத இறுதியில் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது தென்னக ரயில்வே.

Advertisement

அதன்படி, (வண்டி எண்:06027) சென்னை சென்ட்ரலில் இருந்து மார்ச் 30 ம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.

மறுமார்க்கத்தில், (வண்டி எண்:06028)போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8.20க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

AC 3-Tier & ஸ்லீப்பர் கோச்

  1. போத்தனூர்
  2. திருப்பூர்
  3. ஈரோடு
  4. சேலம்
  5. ஜோலார்பேட்டை
  6. காட்பாடி
  7. அரக்கோணம்
  8. பெரம்பூர்
  9. சென்னை சென்ட்ரல்

கோவைக்கான அரசு அறிவிப்புகள், மின்தடை அறிவிப்புகள், செய்திகளை அறிந்து கொள்ள News Clouds Coimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம் 👇

Advertisement

Recent News