கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்ப்பட்டுள்ளன.
கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், எர்ணகுளத்தில் இருந்து கோவை வழியாக முசாபர்பூர் (பீகார்) வரை செல்லும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன் விவரங்கள் பின்வருமாறு:-
எர்ணாகுளம் – முசாபர்பூர் வாராந்திர சிறப்பு ரயில்கள்
(கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக)
Train No.06085
எர்ணாகுளம் ஜங்க்ஷன் – முசாபர்பூர் ஜங்க்ஷன் வாராந்திர சிறப்பு ரயில், 2026 ஏப்ரல் 10, 17 மற்றும் 24 (வெள்ளிக்கிழமை) அன்று இரவு 9:30 மணிக்கு எர்ணாகுளம் ஜங்க்ஷனில் இருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 7:30 மணிக்கு முசாபர்பூர் ஜங்க்ஷனை சென்றடையும்.
Train No.06086
முசாபர்பூர் ஜங்க்ஷன் -எர்ணாகுளம் ஜங்க்ஷன் வாராந்திர சிறப்பு ரயில், 2026 ஏப்ரல் 13, 20 மற்றும் 27 (திங்கட்கிழமை) அன்று இரவு 9:15 மணிக்கு முசாபர்பூர் ஜங்க்ஷனில் இருந்து புறப்பட்டு, வியாழனன்று காலை 10:45 மணிக்கு எர்ணாகுளம் ஜங்க்ஷனை சென்றடையும்.
பெட்டிகள்:-
- AC 2-Tier
- AC 3-Tier
- Sleeper Class
- General Second Class
- Luggage-cum-Brake Van (மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி உடைய பெட்டிகள்)
ரயில் நின்று செல்லும் இடங்கள்:–
அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்படி, பெரம்பூர், குடூர், நெல்லூர், தெனாலி, விஜயவாடா, எலுரு, தாதேப்பல்லிகுடம், ராஜமுந்திரி, சமல்கோட், துவ்வடா, பெண்டூர்டி, கொட்டவலசா, ஸ்ரிககுலம் ரோடு, பாலாசா, சோம்பேட்டா, இச்சபுரம், ப்ரஹ்மபூர், பாலூகோன், குர்தா ரோடு, புபனேஸ்வர், கட்டாக், ஜாஜ்பூர் கீன்ஜார் ரோடு, பத்ரக், பாலாசோர், கார்க்பூர், ஆண்டுல், தாங்குனி, பார்ட்டமான், டுர்காபூர், ஆசான்சோல், சித்தரஞ், ஜம்தாரா, மதுபூர், கியூல், மோகாமா, பக்தியர்பூர், பட்னா சிட்டி, ராஜேந்திர நகர் டெர்மினல், பட்னா ஜங்க்ஷன், பட்லிபுத்ரா மற்றும் ஹாஜிபூர்.
சேலம் பிரிவில் ரயில் நிலைய நேரங்கள்:
Train No.06085 – எர்ணாகுளம் – முசாபர்பூர்
(சனிக்கிழமை) கோவை ஜங்க்ஷன் – 02:27 / 02:30 மணி;
திருப்பூர் – 03:13 / 03:15 மணி;
ஈரோடு ஜங்க்ஷன் – 04:05 / 04:15 மணி;
சேலம் ஜங்க்ஷன் – 05:07 / 05:10 மணி;
ஜோலார்பேட்டை ஜங்க்ஷன் – 07:03 / 07:05 மணி.
Train No.06086 – முசாபர்பூர் – எர்ணாகுளம்
(புதன்கிழமை) ஜோலார்பேட்டை ஜங்க்ஷன் – 21:40 / 21:42 மணி;
சேலம் ஜங்க்ஷன் – 23:10 / 23:13 மணி;
(வியாழக்கிழமை) ஈரோடு ஜங்க்ஷன் – 00:15 / 00:25 மணி;
திருப்பூர் – 01:25 / 01:27 மணி;
கோவை ஜங்க்ஷன் – 03:47 / 03:50 மணி.

