கோவையில் மது ஒழிப்பு குறித்து வீதி நாடகம்- வீடியோ காட்சிகள்!!!

கோவை: கள்ள சாராயம் மற்றும் மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நாடகத்தை நிகழ்த்திய நாடக கலைஞர்களின் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது…

கோவை மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் சார்பில் கள்ள சாராயம், மற்றும் மது ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை நிகழ்த்திய கதிரவன் நாடக கலைக்குழுவினர் கள்ள சாராயம் குடிக்கும் நபருக்கு எமதர்மன் சித்திரகுப்தன் ஆகியோர் அறிவுரை கூறும் விதமாக நாடகம் நிகழ்த்தினர்.

மேலும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிகழ்த்தப்பட்ட இந்த நாடகத்தை பொதுமக்கள் பலரும் கண்டு களித்தனர்.

வீடியோ காட்சிகள்…

Recent News

Video

Join WhatsApp