கோவை: பள்ளி மாணவர்களை தலைவர்களாக உருவாக்கும் வகையில் வருங்கால தலைவர்களை தேர்வு செய்வதற்கான அல்கமி இன்வெஸ்டிடியூச்சர் நிகழ்ச்சி கோவை அல்கமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் அல்கமி பப்ளிக் பள்ளி இயங்கி வருகிறது. சி.பி.எஸ்.சி., பாடப்பிரிவில் இயங்கி வரும் இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுவதோடு, தலைமை பண்புகளை வளர்ப்பதற்கான பல்வேறு நிகழ்ச்சிகள் பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement

இதன் ஒரு பகுதியாக அல்கமி இன்வெஸ்ட்டிடியூச்சர் செரிமொனி 2025 என்ற நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் தலைவர், துணைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிர்வாக பணிகள் மற்றும் தலைமை மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் வகையில் இவர்களில் தலைமை பொறுப்புகளுக்கு தேர்தல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இவ்வாண்டுக்கான தேர்தலில் பங்கேற்கும் வகையில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் சிறப்பு படையில் பணிபுரிந்த மௌனிஷ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டார். மேலும் மாணவர்களிடையே தலைமை பொறுப்புக்கான அடிப்படை தகுதிகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
பி.பி.ஜி கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் அக்ஷய் தங்கவேல் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு மற்றும் தேசிய அளவிலான ஒலிம்பியாக்ஸ் இரண்டாம் தகுதி போட்டியில் வெற்றி பெற்று சாதனைகளை புரிந்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத்தொகை வழங்கினர்.
பின்னர் இதுகுறித்து பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி கூறும் போது, வருங்கால தலைவர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்தலைப் போன்ற இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவித்தார். விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையில் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான கடமைகள் வகுக்கப்பட்டு, அதன் மூலம் தலைவர்களாக அவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பல்வேறு கனவுகளுடன் குழந்தைகளை பள்ளியில் சேர்த்த பெற்றோர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். இந்த தருணத்தில் பள்ளியின் நிர்வாகிகளான தங்கவேல், சாந்தி தங்கவேல், அக்ஷய் தங்கவேல் ஆகியோர் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள், மாணவர்களை தலைமை பண்புக்கு தயார்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.