Header Top Ad
Header Top Ad

கோவையில் மாணவர்கள்-இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

கோவை: கோவையில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.

Advertisement

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கோவை கஸ்தூரிநாயக்கன் பாளையத்தில் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்பட்டது.

அப்பகுதியைச் சார்ந்த இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடினர்.

இதுதொடர்பாக கல்லூரி மாணவர் சரவணன் பேசும்போது, “கடந்த ஐந்து ஆண்டுகளாக வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுகிறோம்.

கணபதி ஓமம் வளர்த்து, விநாயகருக்கு பிடித்தமான கொலுக்கட்டை உணவு மற்றும் பழங்களை வைத்து படையல் செய்து பூசை செய்கிறோம்.

நாள்தோறும் நடக்கும் பூசையில், ஊர்பொதுமக்கள் பலரும் குழந்தைகள் மற்றும் பெரியோர் குடும்பத்துடன் கலந்துகொண்டு விநாயகரை வழிபடுகின்றனர்.

Advertisement

இந்த ஆண்டு நாட்டு மக்கள் நலன் வேண்டி இந்த வருட விநாயகர் சதுர்த்தியில் பூசை செய்து வழிபட்டோம். என்றார்.

பூசையை தொடர்ந்து பொதுமக்களுக்கு சாமி பிரசாதம் மற்றும் அண்ணதானம் வழங்கப்பட்டது.

Recent News