ஆபாச வலைதளங்களால் மாணவர்கள் தடம் மாறுகின்றனர்… கோவையில் திருமா குற்றச்சாட்டு

ஆபாச வலைதளங்களால் மாணவர்கள் தடம் மாறுகின்றனர் என கோவையில் விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

கோவை: கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல் என்று குறிப்பிட்ட அவர் நேற்று அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது அது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் எந்த மூலையிலும், இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது என்ற அளவில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். தீர்ப்பை வழங்கிய நீதிபதி அவர்களுக்கு என்னுடைய பாராட்டு வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பி விடுவார்களோ என்ற அய்யம் இருந்ததாகவும்
ஆனால் அரசு தரப்பில் உறுதியாக நின்று வழக்கறிஞர்கள் வாதாடி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது என்றார்.

மேலும் இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமின்றி, மனித நேயம் உள்ள அனைவருக்கும் கொடுங்காயத்தில் இடப்பட்ட மாமருந்தாக தீர்ப்பு அமைந்திருப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கில் திமுக, அதிமுக , விசிக என யாரிம் உரிமை கோருவதில் நியாயம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.இந்த வழக்கில் செல்போன்கள் மற்றும் இதர சமூக வலைதளங்களில் பதிவு செய்த தடயங்கள் இந்த தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்துள்ளது என குறிப்பிட்ட அவர் ஆகவே அவர்களால் தப்பிக்க இயலவில்லை என்றார்.

யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றார்.

சமூக வலைதளங்களை கையாள்வதில் அரசு சில வரையறைகளை கொண்டு வர வேண்டும் என்றுன் குறிப்பாக பள்ளி மாணவ , மாணவியர் இளைஞர்கள் தடம் மாறக் கூடிய வகையில் ஆபாச வலைத்தளங்கள் மிக இயல்பாக பயன்பாட்டிற்கு வருகின்றன என சாடினார். எனவே இவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ரம்மி போன்ற விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என கூறுகின்ற அதே வேளையில், சமூக வலைதளங்களில் வரும் ஆபாச வலைதளங்களை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு பொறுப்பு இருக்கிறது. பாலியல் குற்றங்களுக்கு இவையும் ஒரு காரணமாக இருப்பதாக சாடினார். ஆர் எஸ் எஸ் அமைப்பு உருவாக்கியதில் இருந்து பள்ளி, கல்லூரி வளாகங்களை தங்களது களமாக பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.
பள்ளி வளாகங்களில் ஷாகா பயிற்சி நடத்துவது இன்றும் தொடர்வதாகவும் யோகா சொல்லித் தருவதாக கூறி மதவாத அரசியலை பிஞ்சு உள்ளத்தில் பதியவைப்பது தொடர்கின்றது என விமர்சித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.