கோவை: தமிழ்நாட்டில் உள்ள சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 14 அரசு சட்டக்கல்லூரிகள் உட்பட மொத்தம் 26 சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்லூரிகளில் 5 ஆண்டுகள் சட்டப்படிப்பு (பி.ஏ, எல்.எல்.பி) மற்றும் 3 ஆண்டுகள் சட்டப்படிப்புக்கு (எல்.எல்.பி) என மொத்தம் 4,930 இடங்கள் உள்ளன.
இதனிடையே, தமிழக சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் tndalu.ac.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.