கோவை: விண்வெளிக்கான திட்டங்களை நாமே செய்ய வேண்டியததற்கான அவசியம் உருவாகும் அதில் சுபான்ஷு சுக்லா முக்கியமான பங்கு வகிப்பார் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இந்தியா இந்தளவு முன்னேறியதற்கு காரணம் கல்வி தான்.
டாக்டர், மந்திரி, போலிஸ் அகாடமியில் இருப்பவர்கள் இன்ஜினியர் ஆக முடியாது ஆனால் ஒரு இன்ஜினியர் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக என்னுடைய பணி அதிகமாக இருப்பது விவசாயத்திலும் மருத்துவத்திலும் தான்.
Advertisement


மனிதரை விண்ணுக்கு அனுப்புவதை தவிர்த்து நாம் அனைவருக்கும் சமமாக உள்ளோம்
விவசாயத்திற்கும் பொறியியல் துறை சார்ந்து பல்வேறு விஷயங்களை செய்ய முடியும். மருத்துவத் துறையிலும் இன்ஜினியரிங் துறையின் தேவை உள்ளது. மனிதர்களின் சராசரி வாழ்நாள் 70 ஆண்டுகளை தாண்டி உள்ளது, தமிழகம் 72 வயது என்று உள்ளது அதைத் தாண்டியும் வாழ்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது இதிலும் இன்ஜினியரிங் துறை செய்ய முடியும்
ஆப்ரேசன் சிந்தூர் சண்டை இரண்டே நாளில் முடிந்ததற்கு காரணம் சர்ஜிக்கல் அட்டேக், அந்த சர்ஜரியை சரியான இடத்தில் செய்ய சொல்லியது satellite அதனால் தான் சரியாக முடிந்தது.
போர் முனையில் இராணுவ வீரர்கள் எல்லைகளை பாதுகாத்து கொண்டிருப்பதால் தான் நாம் இங்கு பேசி கொண்டு இருக்கிறோம்
தற்போது போர்களில் மனிதர்கள் நேரடியாக மோதுவது இல்லை. இயந்திரங்கள் நேரடியாக மோதுகிறது. அவர்களின் (எதிரி நாடு) இயந்திரங்களை தோற்கடிக்க கூடிய இயந்திரங்களை கோவையில் இருந்தும் கூட செய்ய முடியும் அதனை கற்றுக் கொள்ளக் கூடிய இடமாக பொறியியல் கல்லூரிகள் இருந்து கொண்டிருக்கிறது.
நம்முடைய நாட்டை ஒருவன் தொடுவதற்கு தயங்க வேண்டுமென்றால் அதற்கான வலிமையை உருவாக்க வேண்டியது படைபலத்தை தாண்டி இயந்திர பலம் ஆகும்
அனைத்து துறைகளிலும் பொறியியல் துறை முக்கிய பங்காற்றும். ஒரு வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இன்ஜினியர்களை உருவாக்கக்கூடிய நாடாக இந்தியா உள்ளது அதில் 17 சதவிகிதம் இன்ஜினியர்களை உருவாக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றார்.
மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
பொறியியல் துறையில் உலகளாவிய தேவைகள் அதிகரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவில் ஒரு பக்கம் சவால்களும் ஒரு பக்கம் சந்தர்ப்பங்களும் இருக்கும். செயற்கை நுண்ணறிவு என்பது விவசாயம் முதல் விண்வெளி வரை ஏர் முனை முதல் போர் முனை வரை இருக்கும். செயற்கை நுண்ணறிவை எப்படி சரியான முறையில் கையாள்வது என்பது பொறியாளர்களால் தான் முடியும்.
உலக அளவில் அதிகமான பொறியாளர்களை உருவாக்கும் நாடு இந்தியா, இந்தியாவில் அதிகமான பொறியாளர்களை உருவாக்கும் மாநிலம் தமிழ்நாடு. மருத்துவத்துறையிலும் பொறியியலாளர்களுக்கான பணி காத்துக் கொண்டிருக்கிறது.
விண்வெளி துறையிலும் இந்தியா அதன் பங்கு ஆற்றி முதல் மூன்று வரிசைகளில் உள்ளது.
மனிதன் விண்ணுக்கு செல்வது நிலவுக்கு செல்வது என்பதில் மட்டும் இந்தியாவின் பங்கு சரியாக இல்லை ஆனால் தற்பொழுது ககன்யான் சந்திரையான் திட்டங்கள் உள்ளது
சுபான் ஷீ சுக்லா பூமிக்கு திரும்பும் போது அடுத்த கட்டமாக மனிதர்களை அனுப்புவதற்கு உதவும். போரில் நேருக்கு நேராக சண்டை போடுவதில்லை இயந்திரங்களைக் கொண்டுதான் சண்டை போடுகிறார்கள் அதுவும் பொறியியலால் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
அடுத்த கட்ட விண்வெளி பயணங்கள் வர்த்தக ரீதியாக வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது
தற்பொழுது வெளிநாடுகளுக்குச் சென்று தான் பயிற்சிகளை அளித்து வருகிறோம்.
விண்வெளிக்கான திட்டங்களை நாமே செய்ய வேண்டியததற்கான அவசியம் உருவாகும் அதில் சுபான் ஷீ சுக்லா முக்கியமான பங்கு வகிப்பார் என்று கருதுகிறேன். சமையலறைகளிலும் அறிவியல் நுழைந்ததால் தான் சிரமமில்லாமல் சிக்கனமாக சமைக்க முடிகிறது, எனவே அதனை விளைவிக்கக் கூடிய விளை நிலங்களுக்கும் அறிவியல் வேண்டும். விவசாய நிலம் உறங்குகிறது நீர்வளம் குறைகிறது ஆட்களின் எண்ணிக்கையும் குறைகிறது உரமும் பூச்சிக்கொல்லை மருந்துகளும் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது இதை பார்க்கும் பொழுது விவசாயத்திலும் அறிவியல் அவசியமுள்ளது.
தற்பொழுது உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையமே NASA வின் கையில் இல்லை. நாம் அடுத்த விண்வெளி ஆய்வு மையம் அமைப்பதற்கான முன்னோட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடக்கப் போகிறது என்றார்.