கோவை: கூலி திரைப்படத்திற்கு UA Certificate வழங்க உத்தரவிடக்கோரி Sun Pictures சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
வன்முறைகளை மையமாக வைத்து, அதனை சரிக்கட்ட சிறு சமூக அக்கறையை செருகி மாஸ் படம் எடுப்பவர் கோவையைச் சேர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
தனது வித்தியாசமான மேக்கிங் மூலம் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ள லோகேஷ், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக உயர்ந்துள்ளார்.
சமீபத்தில் இவரது படத்தில் வன்முறை காட்சிகள் இடம்பெறுவதாக தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை லோகேஷ் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தது.
இவரது படங்களைப் பார்க்கும் குழந்தைகள் மனதில் தீய எண்ணங்கள் விதைக்கப்படுவதாகவும், அது வரும் தலைமுறைக்கு பேராபத்து என்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
“படத்தை படமாக பாருங்கள்” என்று கம்பு சுற்றுவதை விட்டுவிட்டு, எதார்த்த அபாயத்தை உணர்ந்து, நல்ல இயக்குனர்கள் தங்கள் திறமைகளை சமூக அக்கறையுடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறை வழங்கி வருகின்றனர்.
A Certificate
இந்த சூழலில், ரஜினி நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூலி படத்தில் வன்முறைகள் அதிகம் இருப்பதால் படத்திற்கு A (18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் பார்க்கும் படம்) சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இதனை அசால்டாக விட்டது தயாரிப்பு நிறுவனம். ஆனால், தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாக வந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 18 வயதுக்கு உட்பட்டோருக்கு அனுமதி இல்லை என்று திரையரங்கங்கள் தெரிவித்தன.
இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையங்குகளில் சலசலப்புகள் எழுந்தன. கோவையில் புரோஜோன் மற்றும் கேஜி திரையங்குகளில் பிரச்னை உருவானது.
இதனால் ஷாக் ஆன பட தயாரிப்பு நிறுவனம், செய்வதறியாது திகைத்தது. இதனிடையே சன் பிக்சர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.
UA Certificate

அதில், KGF மற்றும் பீஸ்ட் படங்களில் இதை விட வன்முறைக் காட்சிகள் இருந்த நிலையில், அந்த படங்களுக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், கூலி படத்திற்கு மட்டும் A சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் முறையிட்டுள்ளது.
மேலும், கூலி படத்திற்கும் UA Certificate வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்றம் “இது தாண்டா” தீர்ப்பு என்பது போல் ஒரு தீர்ப்பு கூறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
சிங்கப்பூரில் படத்தின் 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு, அனைவரும் பார்க்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டது போல், இங்கும் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படம் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.404 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கூலி படத்திற்கு UA Certificate கொடுக்கலாமா? கூடாதா?கருத்துக்கணிப்பில் உங்கள் பதிவிடுங்கள் வாசகர்களே 👇
