5 வருஷமா பொறுத்துக்கிட்டேன்… பொங்கி எழுந்து விவாகரத்து கோரினார் விஜய் மனைவி சங்கீதா!

சென்னை: விஜய்யை நான் 5 ஆண்டுகளாகப் பொறுத்துக்கொண்டேன், இனி முடியவில்லை என்று கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Advertisement

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உருவெடுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே அவருடைய மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து வாழ்வதாக தகவல்கள் பரவி வந்தன.

இதற்கு இந்த ஜோடி பதில் எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது. இதனிடையே நடிகை திரிஷா வீட்டில் இருந்து விஜய் வெளியே வர வேண்டும், அப்போது தான் எல்லாம் சரியாகும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.

இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதனிடையே நயினார் பேச்சுக்கு திரிஷா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தான் அவ்வாறு பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக நயினார் கூறினார்.

Advertisement

இதற்கிடையில், நடிகை ஒருவரால் தான் பிரச்சனை ஏற்பட்டதாகவும், தனக்கு விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்றும் கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவாகரத்து கோரி அவர் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சில தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

அதில், “விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை நான் 2021ஆம் ஆண்டு கண்டறிந்தேன்.

அந்த உறவை முறித்துக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால் விஜய் அதை ஏற்கவில்லை.

மேலும், அந்த உறவைத் தட்டிக்கேட்டதால், என்னை பொது வெளியில் நடமாட முடியாதபடி கட்டுப்படுத்தினார். பொதுவெளியில் யாருடனும் பேச விடவில்லை.

பொருளாதார ரீதியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தார். செலவிடுவதற்குக் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வீட்டில் இருந்த உரிமைகளையும் தடுத்து நிறுத்திவிட்டார்.

அவரிடம் மனமாற்றம் வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே எனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நேர்மையான அரசியல் செய்வார் என்று பேசப்பட்ட நிலையில், விஜய் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதனிடையே மனைவியே அவர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக வெளியாகியுள்ள இந்த தகவல், அவரது அரசியல் பயணத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

Comments are closed.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...