கோவை என்னை இழுத்து வந்துவிட்டது; துணை குடியரசுத் தலைவர் நெகிழ்ச்சி

கோவை: கோவை என்னை இங்கு இழுத்து வந்துவிட்டது என்றும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் சிபி.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

கோவை விமான நிலையத்திற்கு வந்த துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “துணை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்த உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்களுக்கும், இந்த தமிழ் மண்ணுக்கும் என் பணிவான வணக்கங்கள். ஊடகங்களைப் பின்னர் சந்திக்கிறேன். நன்றி” என்றார்.

தொடர்ந்து, கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கமான கொடிசியா சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் பேசுகையில், “கோவை தொழில் துறையினரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம். 120 கிலோமீட்டர் இண்டஸ்டிரியல் காரிடார் செயல்படுத்துவதின் மூலம் 3 மாவட்டங்கள் பயன்பெறும். கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதோடு, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.” என்றார்.

பின்னர் நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

துணை குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் சென்னை செல்லும் திட்டம் இருந்தது. ஆனால் செசல்ஸ் நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்குச் செல்லுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இது, கோவை மண். என்னை இந்த மண் இழுத்து வந்ததாகக் கருதுகிறேன். இந்த மண்ணிலிருந்து தான் பொது வாழ்க்கை துவங்கியது. இந்த மண்ணில் சிந்திய ரத்தம் தான், மத்தியில் நிலையான அரசு தொடர வழிவகுத்து உள்ளது.

அரசியல் மாச்சரியங்களைக் கடந்து என்னை வாழ்த்தவும், வரவேற்கவும் வருகை தந்து உள்ள அனைவருக்கும் நன்றி. துணை குடியரசுத் தலைவர் பதவி எனக்கு மட்டுமான பெருமை அல்ல. ஒட்டுமொத்த தமிழகத்திற்கான, தமிழ் மக்களுக்கான பெருமையாகக் கருதுகிறேன்.

எத்தனை தோல்வி வந்தாலும், அடுத்த வெற்றியை நோக்கித் தொடர்ந்து உழைக்கும் கோவை மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

நான் எம்.பி.,யாக இருந்த போது, என்.டி.சி தொழிலாளர்களின் போனஸ் பிரச்சனை இருந்தது. மற்ற மாநிலங்களில் என்.டி.சி மில்கள் இயங்காமல் சம்பளம் பெற்றுக் கொண்டு இருந்தனர். ஆனால் கோவை என்.டி.சி மில்கள் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டு சம்பள பிரச்சனையை எதிர்கொண்டனர்.

அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்த போது டெல்லியில் பேசி அப்பிரச்சனையைத் தீர்த்து வைத்தேன். அப்போதைய சி.ஐ.டி.யு தொழிற்சங்க தலைவர் அய்யப்பன், என்னை வாழ்த்தினார்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது பிற மாநிலங்களின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த பல பொருளாதாரங்கள் வீழ்ச்சி அடைந்து உள்ளன. தொழில் துறையும் சேர்ந்து வளர்வது தான் வளர்ச்சி. நான் கயிறு வாரிய தலைவராகப் பொறுப்பேற்ற போது 2 பொருட்கள் மட்டுமே தயார் செய்யப்பட்டது.

1954 முதல் 2016 வரை இந்தியாவில் இருந்து 652 கோடி ரூபாய்க்கு மட்டுமே கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவேன் என சொன்னேன். அதன்படி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1,782 கோடியாக உயர்ந்தது. 2 முறை எப்படி வென்றேன் எனவும் தெரியவில்லை. 3வது முறை எப்படித் தோற்றேன் எனவும் தெரியவில்லை.

எர்ணாகுளம் – பெங்களூரு வந்தே பாரத் ரயில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு நகரங்களில் நின்று செல்லும். இந்த ரயில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மாடர்னைசேஷன் என்ற பெயரில் தொழிலாளர்களே இல்லாத தொழிலை வளர்ச்சி அடைய செய்ய முடியாது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் கோவை வர தினந்தோறும் ரயில் சேவை விரைவில் வர உள்ளது. கர்நாடகா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து இருப்பது பெங்களூரு விமான நிலையத்தின் விரிவாக்கம் காரணமாகத் தான். அது போல் கோவை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கும் உறுதுணையாக இருப்பேன்.

எர்ணாகுளம் – பெங்களூரு வந்தே பாரத் ரயில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு நகரங்களில் நின்று செல்லும். இந்த ரயில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மாடர்னைசேஷன் என்ற பெயரில் தொழிலாளர்களே இல்லாத தொழிலை வளர்ச்சி அடையச் செய்ய முடியாது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் கோவை வர தினந்தோறும் ரயில் சேவை விரைவில் வர உள்ளது. கர்நாடகா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து இருப்பது பெங்களூரு விமான நிலையத்தின் விரிவாக்கம் காரணமாகத் தான். அது போல் கோவை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கும் உறுதுணையாக இருப்பேன்.

விக்சித் பாரத் வளர்ச்சியில் கோவையின் பங்களிப்பை அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.விக்சித் பாரத் வளர்ச்சியில் கோவையின் பங்களிப்பை அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.