மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Advertisement

அதன் ஒரு பகுதியாக கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்தாண்டு கந்தர் சஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் துவங்கியது.

நாள்தோறும் யாக சாலை பூஜை, அபிஷேக பூஜை, திருவீதி உலா நடந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதனால் அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இன்றும், நாளையும் அடிவாரத்தில் இருந்து மலை மேல் செல்ல இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை எனக் கோவில் நிர்வாகித்தனர் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

வாகனங்கள் நிறுத்துவதற்காக சட்டக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டு உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் பக்தர்கள் தங்களின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சென்றனர். கோவில் பேருந்து வாயிலாகவும், படிக்கட்டு பாதை வாயிலாகவும் மலை மேல் உள்ள கோவிலுக்கு செல்ல சென்று சாமி தரிசனம் செய்தனர். .

பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பார்க்கிங், பேருந்து, மருத்துவ வசதிகள் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்டம் நிர்வாகம் இணைந்து செய்துள்ளனர்.

சூரசம்ஹார நிகழ்ச்சியில் சூரபத்மனை வதம் செய்து நல்வழிப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது இதனை அங்கிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் மனமுருக கண்டுகளித்தனர்.

Recent News

கோவையில் இறைச்சிக்கு பணம் தராததால் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்தது- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…

கோவை: கோவையில் மாட்டு இறைச்சி வாங்கி பணம் தராததால் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.கோவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு...

Video

இதைக்கூடவா தூக்கிட்டு போவிங்க…? கோவை மக்களே இந்த வீடியோவ பாருங்க!

கோவை: டெலிவரிக்கு வைத்திருந்த கேஸ் சிலிண்டரை இளைஞர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.கோவை மாநகர் உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் நாள்தோறும் சிலிண்டர் டெலிவரி செய்வதற்கு சாலையோரம் சிலிண்டர்கள் அடுக்கி...