Header Top Ad
Header Top Ad

VD12: விஜய் தேவரகொண்டா படத்தில் சூர்யாவின் வாய்ஸ்…!

VD12 படத்தின் டைட்டில் டீசருக்கு நடிகர் சூர்யா டப்பிங் கொடுக்க உள்ளார்.

ஜெர்சி படத்தை இயக்கிய கவுதம் தின்னனூரி இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் VD12 திரைப்படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் சப்ஜெக்டாக தயாரும் இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனல், பல்வேறு காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிப்போனது.

VD12 திரைப்படத்தை மே 30ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் நாக வம்சி அறிவித்திருந்த நிலையில், போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்படத்தின் தமிழ் டீசர் தயாராகி உள்ள நிலையில், டீசருக்கு நடிகர் சூர்யா டப்பிங் கொடுத்துள்ளார். அவர் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்துள்ளாரா? அல்லது கதையை விவரிக்கும் விதமாக டப்பிங் செய்துள்ளாரா என்பது டீசர் வெளியான பிறகே தெரியவரும்.

Recent News