கோவை: கோவையில் 10 மாவட்ட அலுவலர்களுடன் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விஜயா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்தனர்.இந்த கூட்டத்தில் குறிப்பாக போதைக்கு அடிமையாகும் சிறுவயதினரை மீட்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தற்பொழுது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.தொடர்ந்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் விஜயா மற்றும் உறுப்பினர்கள் கசிமிர் ராஜ், ஸ்ரீ காவ்யா நாகராஜன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.