நொய்யல் ஆற்றை பாதுகாக்க IAS அதிகாரி தலைமையில் குழு வேண்டும்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்…

கோவை: நொய்யல் ஆற்றை பாதுகாப்பதற்கு IAS அதிகாரி தலைமையில் குழு அமைத்திட வேண்டும் என்று மாநில அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி கோவையை சேர்ந்த விவசாயி கருப்பசாமி என்பவர் 10 ஏக்கர் நஞ்சை விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பணப் பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை வைத்து விவசாயம் செய்து வரும்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் சட்டவிரோதமாக தனிநபர் ஒருவருக்கு சாதகமாக அந்த தென்னை மரங்களை வெட்டி சேதம் விளைவித்து விட்டதாகவும் எனவே அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement

கிழக்கு புறவழி சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் கூறும் நிலையில் தற்பொழுது சாலை ஓரங்களில் அளவெடுக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாகவும் எனவே அதன் உண்மையை மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால் இனிவரும் காலங்களில் வாக்குறுதிகள் எல்லாம் வரும் அந்த வாக்குறுதிகளும் அறிவிப்புகளும் நீர் பூத்த நெருப்பாக மாறிவிடக்கூடாது என்று குறிபிட்ட அவர் அந்த அறிவிப்புகள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், எதிராக இருந்தால் தேர்தல் காலங்களில் விவசாயிகள் அவர்களது பதிலை தெரிவிப்பார்கள் என்றார்.

Advertisement

கிழக்கு புறவழிச் சாலை மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறதா மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறதா என்று தெரியாத நிலையில் தற்பொழுது மத்திய அரசானது மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலமாகத்தான் இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறி இருக்கிறார்கள் என்றும் எனவே அதன் உண்மை விளக்கத்தை மாவட்ட நிர்வாகம் கூற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கிழக்கு புறவழிச் சாலைக்கு விவசாயிகள் நிலத்தை கொடுக்கின்ற நிலையில் சர்வீஸ் ரோடு எதுவும் தற்பொழுது வரை அமைக்கப்படவில்லை எனவே கூடிய விரைவில் அது அமைத்து தர வேண்டும் என்றார். கோவையில் அவிநாசி சாலை திருச்சி சாலை பொள்ளாச்சி சாலை என்று பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்பட்டு விட்டதாகவும் ஆனால் அதனை மீண்டும் நடுவதற்கு எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை, வெட்டிய மரங்களை சட்டபூர்வமாக வைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் இல்லை என்று குற்றம் சாட்டிய அவர் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோவையில் ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கோவையில் காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள் மயில்கள் ஆகியவற்றினாலும் தற்பொழுது கிளிகளினாலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர் எனவே விவசாயிகளை மாநில அரசு மத்திய அரசும் பாதுகாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

சட்டப்பேரவையில் விவசாயம் சார்ந்த எந்த திட்டமாக இருந்தாலும் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு தான் அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் இல்லை எனில் கடும் எதிர்ப்புகளை தெரிவிப்போம் என்றும் கூறினார். விவசாயிகளிடம் கருத்தை கேட்காமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்ற முதல்வர் கூறியிருப்பதை நம்புகிறோம் என்றும் தெரிவித்தார்.

தற்போதைய காலத்தில் ரியல் எஸ்டேட் துறைகள் பெருகி வருவதாகவும் ஆனால் விவசாய நிலங்கள் சுருங்கி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், மாநில அரசு இதனை பரிசீலனை செய்ய வேண்டும் இது ஒரு மாவட்டத்திற்கு மட்டுமல்ல அனைத்து மாவட்டத்திற்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.

நொய்யல் ஆற்றை பாதுகாப்பதற்கு கோடிக்கணக்கில் நிதிகள் ஒதுக்கப்படுவதாகவும் ஆனால் அந்த பணம் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை, ஆக்கிரமிப்புகளால் நொய்யல் ஆறு சுருங்கி சுருங்கி அடையாளம் தெரியாமல் போய்விடும் அளவிற்கு மாறுவதாகவும் இதற்காக பலரும் போராடி வருகிறார்கள் எனவே மாநில அரசு நொய்யல் ஆற்றை பாதுகாப்பதற்கு IAS அதிகாரி அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் அதில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group