கோவை: கல்விக்கு மத்திய அரசு கொடுத்த கோடிக்கணக்கான நிதிக்கு உரிய ரசீதை கேட்டால், கொடுப்பதில்லை தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக அரசு தொடர்ந்து பொய் சொல்கிறது என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும்போது :
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு கல்விக்கான நிதி கொடுக்கவில்லை மாணவர் செல்வங்களை வஞ்சிக்கின்றனர் என்று கூறுகிறார் என்ற கேள்விக்கு, இது நீண்ட நாட்களாக கூறுவதாகவும், ஏன் அந்தக் கல்விக்கான நிதி என்ற விஷயத்தை இவர்கள் கேட்பதும் மத்திய அரசு அதற்கான சொல்லுகின்ற பதிலை ஏதோ புதிதாக இல்லை என்றார்.
இது பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூறியுள்ளதாகவும் கூறியவர், மாநில அரசாங்கம் எடுக்கின்ற முடிவுகளை மத்திய அரசாங்கம் கேட்டால் அவர்கள் எந்த வகையில் எடுத்து வைக்க வேண்டுமோ எடுத்து வைக்க வேண்டும் என்றும், அதை விட்டுவிட்டு அரசியலுக்காக பேசுவது சரி இல்லை என்றும், பள்ளிக் கல்வித் துறை இன்று எத்தனையோ பள்ளிகளில், நாம் பார்த்துக் கொண்டு உள்ளோம் பள்ளி வகுப்புகளில் மரத்தடியில் படிக்கின்ற சூழலையும், கழிப்பிடங்கள் இல்லாமல் இருக்கின்ற சூழலையும், எனது தெற்கு சட்டமன்ற தொகுதியில் கூட எவ்வளவு இடங்களில் ஆசிரியர்கள் கிடையாது என்றார்.
நான் செல்லுகின்ற பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு எங்களுக்கு உதவ முடியுமா கேள்வி எழுப்பவதாக கூறிய அவர், இன்று நிறைய பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் மிக மிக கடுமையாக உள்ளதாக தெரிவித்தவர், இதனால் பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கு சரியான விதமான ஆசிரியர்கள் கிடையாது என்றார்.
இவர்கள் தேர்தல் அறிக்கையில் என்ன கூறினார்கள் ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது ? என்று கேள்வி எழுப்பிய அவர் இன்று 4 1/2 ஆண்டுகள் ஆகியும் கூட, பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்ற வில்லை, ஆனால் இந்த எல்லாம் கேள்விகள் எல்லாம் எழுப்பும் போது, மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்ற ஒற்றை வார்த்தையில் சமாளிக்கிறார்கள் என்றார்.
அவர்கள் கூறிவது உண்மை அல்ல இது இல்லாமல், மத்திய அரசு கொடுக்கிற எத்தனையோ நிதிகள், இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு எத்தனையோ நிதிகள் பிரதமர் மோடி அவர்கள் கொடுத்துக் கொண்டு உள்ளதாகவும்,, ஆனால் அவையெல்லாம் எப்படி நீங்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் ? என்று கேள்வி எழுப்பினார்.
பயன்படுத்திய நிதிக்கு யுட்டிலைசேஷன் சான்றிதழ் கொடுக்கவில்லை என்றும், உங்களுக்கு கொடுக்கின்ற பணத்திற்கு ரசீதை சமர்ப்பிக்க வேண்டும், அதேபோல் தமிழக அரசு மத்திய அரசு கொடுக்கின்ற கோடிக் கணக்கான ரூபாய்களுக்கு, பயன்படுத்தப்பட்டதற்கான ரசீது கொடுக்காததால் மத்திய அரசினுடைய நிர்வாகத்தின் இருக்கின்றவர்கள் நீங்கள் இதை கொடுத்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நிதி என்று சொல்வதாகவும், உடனே இவர்கள் வேண்டுமென்று மத்திய அரசை வஞ்சிக்கிறது என்று வழக்கமான பல்லவியை பாடுவதாக தெரிவித்தார். அதனால் அவர் கூறியது எந்த உண்மையும் கிடையாது என்றார்.
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்தான கேள்விக்கு
தேர்வு குறித்து கேட்டால், நாங்கள் நடத்துகிறோம், நீதிமன்றம் தடை விதிப்பதாகவும், பதிலைக் கூறுவதாக கூறினார். மேலும் அவர்களுடைய சட்ட ஆலோசகர்களை வைத்து நீதிமன்றத்தில் தகுந்த முறையில் அந்த வழக்கை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றவர், ஆண்டு கணக்குகளாக வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அந்த காரணத்தை ஒரு அரசு கூற முடியுமா ? அரசுக்கு ஐந்தாண்டுகள் நான் ஆட்சிக்காலம் அந்த ஐந்தாண்டுக்குள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோமா ? என்று பார்க்க வேண்டும், நீதிமன்றத்தை கூறி எத்தனை நாள் காரணம் காட்டுவீர்கள் ? என்றார்.
பா.ஜ.க வை கண்டித்து சிவசேனா போராட்டம் குறித்தான கேள்விக்கு, அதை அவர்கள் செய்யட்டும் ஒரு நாட்டின் நடக்கக் கூடிய விஷயங்களை மத்திய அரசு பார்த்துக் கொள்ளும் என்று கூறிச் சென்றார்.