Header Top Ad
Header Top Ad

கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் போராட்டம்- காரணம் என்ன?

கோவை: மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதை மாவட்ட நிர்வாகமோ கம்பெனியோ மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மார்க் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது காலி பாட்டில்களை திரும்ப பெறுவதில் பல்வேறு பணிச்சுமைகள் ஏற்படுவதாக தெரிவித்து கோவையில் டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

கோவை பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மார்க் தமிழ்நாடு மாநில வாணிப கழக கோவை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மார்க் தொழில் சங்கத்தை சார்ந்த 70க்கும் மேற்பட்டோர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர்.

மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதிலும் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதிலும் பல்வேறு பணி சுமைகளும் நெருக்கடிகளும் ஏற்படுவதாக தெரிவித்து ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை நிர்வாகமோ அல்லது அந்தந்த கம்பெனிகளோ செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

Advertisement

இது குறித்து அவர்கள் கூறுகையில், விற்பனைக்கு டாஸ்மாக் கடைகளுக்கு வரக்கூடிய பாட்டில்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை நிர்வாகமோ அல்லது அந்தந்த கம்பெனிகளோ ஒட்டி அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு டாஸ்மார்க் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் மது கூட உரிமைதாரர்கள் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் பொழுது பல்வேறு நெருக்கடிகளை தங்களுக்கு தருவதாகவும் பல்வேறு இடங்களில் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு மறுப்பதாகவும் கூறினர். டாஸ்மாக் கடைகள் எதுவும் அடைக்கப்படவில்லை என்றும் எங்களது கோரிக்கைக்கான முடிவை தான் கேட்கிறோம் என தெரிவித்த அவர்கள் தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

Recent News