கோவை: கோவையில் போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 15.07.2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் TNPSC GROUPILGROUP IIA-ல் 645காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வுகளுக்கான முதல்நிலை தேர்வு 28.09.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தி முடிக்கப்பட்டது.
தற்போது கூடுதலாக 625 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை 18.11.2025 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் TNPSC GROUPII மற்றும் TNPSC GROUP IIA முதன்மை போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 10.12.2025 அன்று முதல் காலை 10.30 முதல் 01.30 மணி வரை கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடைபெற உள்ளது. இம்மையத்தில் SmartBoard இலவச Wifi வசதி, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, ஆகியன உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் வாரத் தேர்வுகள், முழுமாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்பட உள்ளது. மேலும்https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் மனுதாரர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeSaye9pbMfPSoCcdWJx8W9tFUyfZlizfeXE GyvxxSYIEphbA/viewform?usp=publish-editor என்ற கூகுள் படிவத்தில் நிரப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது studvcirclecbe@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 9499055937 மற்றும் 9361576081 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு, பயனடையுமாறும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.



