டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி… கோவையில் விபத்து…!

கோவை: சரவணம்பட்டி அருகே லாரி ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி கார்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான குமார். இவரும் கிளீனராக பணிபுரியும் இளையரசு என்பவரும் நேற்றிரவு சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் சிலிக்கான் லோடை இறக்கி விட்டு திரும்பும் போது துடியலூர்- சரவணம்பட்டி இணைப்பு சாலை அருகே ஓட்டுநர் குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள் மீது மோதியது. உடனடியாக கிளீனர் இளையரசு சாமர்த்தியமாக செயல்பட்டு பிரேக்கை அழுத்தி லாரியை நிறுத்தி உள்ளார்.

பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ஓட்டுனர் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Recent News

Video

Join WhatsApp