பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானைப் பாகன் மரணம்…

கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை பாகன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பேரூரில் பட்டீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளது. இங்கு கல்யாணி என்ற கோவில் யானை உள்ளது.

கோவை மக்கள் மத்தியில் பிரபலமான இந்த கல்யாணி யானையை பராமரிக்கும் பாகனாக ரவி என்பவர் பணியாற்றி வந்தார்.

இதனிடையே நேற்று பணி முடித்துவிட்டு தனது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார்.

இதைப் பார்த்தவர்கள் ரவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்  கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரவி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.