Header Top Ad
Header Top Ad

தவெக பாரதிதாசன் பண மாலை அணிவித்த விவகாரம்- கோவை வந்த அமைச்சர் கூறிய பதில்…

கோவை: கோவையில் நடைபெற்ற வரும் பல்வேறு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்…

கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவு சார் மைய கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், 245 கோடி ரூபாயில் இந்த நூலாகத்தின் கட்டிடமும் 50 கோடி ரூபாயில் புத்தகங்களும் 5 கோடி ரூபாயில் கணினி உள்ளிட்டவைகளை சேர்த்து 300 கோடியில் இந்த நூலகம் அமைய உள்ளதாகவும்
டிசம்பர் மாத இறுதியில் இப்பணிகள் முடிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சுமார் 305 இருக்கைகள் கொண்ட உள் கலையரங்கம் இதில் அமைய உள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பிரிவு, தமிழ் நூல்களுக்கு தனி பிரிவு, ஆங்கில நூல்களுக்கு தனி பிரிவு, போன்றவைகளும் அமைய உள்ளதாகவும் டிஜிட்டல் நூலகம் அறிவியல் மையம் போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

Advertisement

மேற்கு புறவழிச்சாலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் டெண்டர் விடும் பணிகள் தற்பொழுது நடைபெற இருப்பதாகவும் மூன்றாவது கட்டமாக நில எடுப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். கோல்ட் விங்ஸ்- உப்பிலிபாளையம் மேம்பால பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதற்கு கீழ் நடை பாதை உடன் கூடிய 1.5 மீட்டர் டிரைன் பணிகளும் சேர்ந்து நடைபெற்ற வருவதாக கூறினார்.

ஜனவரி மாதம் முதல்வரால் இந்த நூலகம் திறப்பு விழா காணப்படும் எனவும் தெரிவித்தார். சிங்காநல்லூர் மேம்பாலம் ஒன்றிய அரசின் கீழ் வருவதாகவும் புதிய வரையறை போடப்பட்டு அனுமதிக்காக அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கோவை திருச்சி சாலை விரிவாக்க பணிகள் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், 3500 கோடி ரூபாய்க்கு கிரீன் பீல்ட் சாலை என்று அறிவிப்புடன் அது இருந்ததாகவும் இது சம்பந்தமாக நிதின் கட்கரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்தை டெண்டர் அளவிற்கு கொண்டு வந்து விட்டு மத்த பொறுப்பையும் பொறுப்பேற்றுக் கொண்டது தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அடியேன் தான் என கூறினார்.

திருவண்ணாமலையில் தமிழக வெற்றி கழகத்தின் பாரதிதாசன் பண மாலை அணிவித்து பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், அவர் என்ன செய்தார் என்று எனக்கு தெரியாது என்னை பொறுத்தவரை அவர் என்னுடைய வாக்காளர் சென்ற முறை அவர் எனக்கு வாக்களித்தவர் அவரது குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம் அவரது அண்ணன் தம்பிகள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்கள் எனக்கு நெருக்கமான குடும்பம் அந்த குடும்பத்தை பொருத்தவரை எனக்கு நெருக்கமானவர்கள் தான் அவர்கள் இல்லம் கட்டினார்கள் அதற்கான பத்திரிக்கையை என்னிடம் கொடுத்து கண்டிப்பாக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் நான் பொதுவாக கட்சியை பார்ப்பவன் கிடையாது திருவண்ணாமலை பொறுத்தவரை யார் எனக்கு அழைப்பு கொடுத்தாலும் நான் அந்த சட்டமன்றத்தின் உறுப்பினர் என்னை மதித்து வந்து அழைப்பிதழ் கொடுத்த காரணத்தினால் நான் அந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தேன் அவ்வளவுதான் என்னுடைய சப்ஜெக்ட் என தெரிவித்தார்.

தேர்தலுக்கு கூட்டணி கட்சிகள் அதிகமான இடங்கள் கேட்பது குறித்தான கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்

முன்னதாக கோல்ட் விங்ஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்தார்.

Recent News