கோவை: கட்டாய கல்வி தொடர்பாக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மண்டியிட்டு பிரம்பால் அடிவாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் RTE கல்வி நிதி தொடர்பாக மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நிதியை விடுவிக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முடக்கியதால் கல்வி வாய்ப்பை இழந்த ஒன்றரை லட்சம் ஏழை மாணவர்களிடம் கண்ணீர் மல்க மண்டியிட்டு மன்னிப்பு கூறும் போராட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தினர்.
Sorry ma மன்னித்து விடுங்கள் பிரதமரும் முதல்வரும் முடக்கிய கல்வி உரிமையை உங்களுக்கு மீட்டு தர இயலாததற்கு sorry என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை சக போராட்டக்காரர்கள் பிரதமர் மற்றும் முதல்வரின் முகமூடி அணிந்து பிரம்பால் அடித்தனர். அப்போது sorry ma என முழக்கங்கள் எழுப்பி போராட்டம் மேற்கொண்டனர்.



