தமிழகத்தில் தகித்த வெயில்… நேற்று எந்த ஊரில் எவ்வளவு வெப்பம்? நம்ம ஊரில் எப்படி?

கோவை: தமிழகத்தில் எந்தெந்த ஊர்களில் எவ்வளவு வெப்பம் பதிவானது என்பதை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கோடைகாலம் தொடங்கும் முன்பே கோவையில் வெப்பம் வாட்டியதைப் போல், தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களிலும் வெப்பம் வாட்டியது.

இப்போது, தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல், வால்பாறையில் மட்டுமே 30 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக வெப்பம் பதிவாகிறது.

இதனிடையே தமிழகத்தில் நேற்று எந்த ஊரில் எவ்வளவு வெப்பம் பதிவானது என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கரூர் மற்றும் மதுரையில் அதிகபட்சமாக 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. பாரன்ஹீட்டில் இது 98.6 டிகிரி வெப்பம் ஆகும்.

நமது கோவையில் சற்றே குறைவாக 36.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. பாரன்ஹீட்டில் இது 98.6 டிகிரி ஆகும்.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பதிவான வெப்பத்தை கீழே காணலாம்.

Recent News

Latest Articles