அணியை போருக்கு தயார் செய்ய வேண்டும் – கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு…

கோவை: நமது அணியை தேர்தல் போருக்கு தயார் செய்யவேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக இளைஞர்ணி தேர்தல் பிரச்சார முன்கள பணியாளருடனான ஆலோசனை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் கோவை, நீலகிரி மாவட்ட மாவட்ட, மாநகர், ஒன்றிய, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடான ஆலோசனைக் கூட்டம் முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இளைஞர் அணி நிர்வாகிகளுடன் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி பேசியதாவது:-

ஒரு வாரத்திற்கு முன் கோவையில் மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தை மாநாடு போல நடத்தினோம். மீண்டும் முக்கியமான நேரத்தில் குறிப்பாக தேர்தல் அறிவித்த பிறகு நிர்வாகி கூட்டம் நடத்துகிறோம். வரும் தேர்தலில் கழக அணி வெற்றி பெற வேண்டும். இளைஞர் அணி நிகழ்வில் கலந்து கொள்வது குடும்ப நிகழ்ச்சி கலந்து கொள்ளும் உணர்வை ஏற்படுத்துகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களத்தில் இளைஞர் அணி சென்று வாக்கு கேட்டோம்.

Read Also: Coimbatore Crime News: மக்களே உஷார்… 77 நாட்களில் ரூ.15 கோடி மோசடி!

இந்த பிரச்சாரத்தால் 100 சதவீத வெற்றியை பெற்றோம். மீண்டும் கழக அணி களத்தில் இறங்கி சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். கோவையை யார் யாரோ கோட்டை என கூறுகிறார்கள். கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த மேற்கு மண்டலமும் திமுக கோட்டை என நிரூபிக்க வேண்டும்.

வீடு வீடாக சென்று இளைஞரணியினர் தேர்தல் பணியாற்ற வேண்டும். பூத்துக்கு ஒரு இளைஞர் அணி அமைப்பாளர் என அமைத்துள்ளோம். நமது அணியை தேர்தல் போருக்கு தயார் செய்யவே இந்த ஆலோசனை கூட்டம்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவிலேயே தினமும் மக்களை சந்தித்த முதல்வர் நமது முதல்வர் தான். இறுதி நேரத்தில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் நினைவு படுத்த வேண்டும்.

முதல்வர் பல்வேறு திட்டத்தை சொல்லி, அதனை செய்து காட்டியுள்ளார். காலை உணவு திட்டம் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயன் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

இவ்வாறு உதயநிதி பேசினார்.

Click here to Read News கோவையில் வீட்டில் விபசாரம்: அழகி, மூதாட்டி உட்பட 3 பேர் கைது!

தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்திலும் கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உதயநிதி கலந்து கொள்கிறார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் கார் தீ பிடிப்பு- சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்…

கோவை சின்னியம்பாளையம் அருகே அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.