கோவை: கதை எழுதும் பொழுதே சென்சாரை பற்றி நினைப்பது கிரியேட்டிவிட்டியை கொலை செய்வது போன்றது என கோவையில் இயக்குனர் அபிஷன் ஜீவந்த் தெரிவித்துள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ்ராஜ் தயாரிப்பில் இயக்குனர் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவந்த், அனஸ்வரா ராஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள With Love படம் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் கோவை கொடிசியா பகுதியில் உள்ள ஜிஆர்டி கல்லூரியில் படக்குழுவினர்களான சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ், அபிஷன் ஜீவந்த, அனஸ்வரா ராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில், அபிஷனை கதாநாயகராக இந்த திரைப்படத்தில் அறிமுகம் செய்கிறோம் மக்களின் ஆதரவு தங்களுக்கு வேண்டும் என தெரிவித்தார். அபிஷன் மீது மிக அதிக நம்பிக்கை இருப்பதாகவும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்க்கும் பொழுதே இவர் மிகப்பெரிய நட்சத்திரம் என்று நான் கூறிவிட்டேன் என்று தெரிவித்தார். தற்பொழுது இளம் தலைமுறையினர் திரையுலகில் வந்து கொண்டே இருக்கிறார்கள் அது திரை உலகிற்கு மிகப்பெரிய பலம் என தெரிவித்தார்.
நல்ல திறமைகளையும் நல்ல படங்களையும் நம் மக்கள் எப்பொழுதும் ஆதரிப்பார்கள் எனவும் தெரிவித்தார். 2017 க்கு பிறகு தற்பொழுது தான் படங்களை தயாரிப்பதாக தெரிவித்தார். இந்த படத்தை இன்னும் அப்பா பார்க்கவில்லை ஆனால் அப்பாவிற்கு அபிஷனை மிகவும் பிடிக்கும் படத்தின் டீசரை பார்த்து மிகவும் பாராட்டினார் என தெரிவித்த அவர் படத்தைப் பார்த்துவிட்டு அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம் என தெரிவித்தார். பள்ளிப் பருவம் நினைவுகளை அதிகம் இந்த படத்தில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கோச்சடையான் படம் போன்று டெக்னாலஜி சம்பந்தப்பட்ட படங்களை மீண்டும் தயாரிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருப்பதாகவும் அந்த காலகட்டத்தில் இந்த அளவுக்கு டெக்னாலஜி கிடையாது என தெரிவித்த அவர் அப்ராட், சைனா, ஜப்பான், ஹாலிவுட்டில் எல்லாம் அனிமேஷன் மீடியம் படங்களுக்கு லைவ் ஆக்ஷன் மீடியம் அளவிற்கு Importance உள்ளது என்றும் இந்தியாவில் மகா அவதார் நரசிம்மா எனும் படம் அதனை திறந்து வைத்துள்ளதாகவும் வரும் காலத்தில் அதிகமான அனிமேஷன் படங்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் எங்களது குழுவும் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் என தெரிவித்தார்.
மேலும் அந்த அனிமேஷன் படங்கள் எடுக்கும் பொழுது கதையைப் பொறுத்துதான் நடிகர்களை முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். காந்தாரா படத்திலும் அதிகமான அனிமேஷன் காட்சிகள் இருந்தது இருந்தாலும் கதைக்கு என்ன தேவையோ அதற்குத் தேவையான டெக்னாலஜியை நாம் கொடுக்க வேண்டும் அதே சமயம் ஸ்கிரிப்டும் மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.
மேலும் இந்த படத்திற்கு சென்சார் க்கு அப்ளே செய்து விட்டதாகவும் கூறினார். சென்சார் என்பது அந்தந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு எந்த மாதிரியான படங்கள் காட்ட வேண்டும் என்பது அவர்களது பணி சென்சார்பாடி Respect உடன் தான் உள்ளார்கள் என தெரிவித்தவர் தற்பொழுது அதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு விருப்பமில்லை என தெரிவித்தார். என்றும் ஒரு நல்ல கதையை தான் அப்பா எதிர்பார்ப்பதாகவும் ஒரு நல்ல கதை இருந்தால் அது அப்பாவிற்கு பிடிக்கும் என்று நினைத்தால் கண்டிப்பாக அப்பாவிடம் அந்த கதையை கொடுப்பேன் என தெரிவித்தார்.
தற்பொழுது அப்பா அதிகமாக இளம் தலைமுறையினருடன் படம் செய்து கொண்டிருக்கிறார் அவர் திறமையையும் ஸ்கிரிப்டையும் தான் பார்ப்பார் என தெரிவித்தார். அப்பா ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவரையும் ஒரே திரையில் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வம் தான் என்றும் லோகேஷ் கனகராஜ் ப்ராஜெட்டை பற்றி பேசி இருக்கிறார்கள் ஆனால் அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை அதேசமயம் இருவரும் சேர்ந்து நடித்தால் அனைவருக்கும் ஒன்று நானும் ஆவலுடன் அதனை பார்ப்பேன் என தெரிவித்தார். தற்போது OTT எல்லாம் வந்துவிட்டது நல்ல கதைகளும் நல்ல படங்களும் வந்தால் நம் மக்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்தார்.
மேலும் தற்பொழுது திறமை வாய்ந்த இளம் தலைமுறையினர் அறிமுகம் செய்யப்பட்டு வருவதாகவும் அது திரையுலகத்திற்கு மிகப்பெரிய ஆதரவை கொடுக்கும் எனவும் கூறினார். ரீ ரிலிஸ் படங்கள் பற்றிய கேள்விக்கு, சிறுவயதில் ஒரு படத்தை திரையில் பார்த்து கொண்டாடிய தருணத்தை மீண்டும் அதனை ரீ கிரியேட் செய்கிறது என தெரிவித்தார்.
படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பொழுதும் பலரும் படையப்பா நீலாம்பரியை திரையில் பார்க்க வில்லை தற்பொழுது அவர்களை திரையில் பார்த்து மகிழ்கிறார்கள் என தெரிவித்தார். இந்த படத்தில் நான் எந்த கேமியோ ரோலும் செய்யவில்லை என அடுத்த படத்தில் அதனை எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார்.
இயக்குனரும் நடிகருமான அபிஷன் ஜீவந்த் பேசுகையில், அனைத்து வித எமோஷன்களும் உள்ள ஒரு நல்ல படமாக இந்த படம் இருக்கும். இந்தப் படத்தின் இயக்குனர் என்னுடன் பணி புரிந்தவர் தான் டூரிஸ்ட் ஃபேமிலி படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே இந்த படத்தின் கதையை அவர் என்னிடம் கூறிவிட்டார் என்று தெரிவித்தார். இந்த படத்திற்கு பெயர் வைப்பதற்கு அனைவரும் அதிகம் யோசித்ததாகவும் படத்தை முழுமையாக பார்த்து முடிக்கும் பொழுது அது ஒரு காதல் கடிதமாக தங்களுக்கு இருந்ததால் With Love என்று பெயர் வைத்தோம் என்றார்.
பிரதீப் ரங்கராஜன் முதல் படம் இயக்கம் செய்தால் இரண்டாவது படத்தில் அவர் நடிகராக நடித்தார் அதே தான் எனக்கும் நடக்கிறது எங்களுக்குள் ஒரே மாதிரியான விஷயங்கள் அதிகம் உள்ளது எனவே தான் பார்வையாளர்களுக்கும் அது போன்று தோன்றுகிறது என தெரிவித்தார். தனக்கு இயக்குனர் மற்றும் நடிகர் இரண்டுமே ஏதுவாக தான் உள்ளது படங்களையும் இயக்குவேன் நடிக்கவும் செய்வேன் என தெரிவித்தார்.
அவசர அவசரமாக ஒரு கதையை எழுதி அது தவறாக சென்று விடக்கூடாது எனவே பொறுமையாக இருந்து ஒரு கதையை எழுதி எப்போது உறுதியான மனநிலை வருகிறதோ அன்று அந்த படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம் என தெரிவித்தார்.
ஒரு கதை எழுதும் பொழுதே சென்சார் பிரச்சினை பற்றி நினைத்து கொண்டிருந்தால் ஒரு Creativity யை அங்கேயே கொலை செய்கின்றது போல் ஆகிவிடும் என தெரிவித்தார்.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பேசுகையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கொண்டாடியதைப் போலவே இந்த படத்திற்கும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த படத்தை பார்க்கும் பொழுது அவர்களது பள்ளி காலங்கள் அனைத்தும் நினைவில் வந்து செல்லும் எனவும் தெரிவித்தார். புதிதாக ஒரு துறைக்குள் வரும் பொழுது கிரிடிசிசம் இருக்கும் ஆனால் அவர்களது உழைப்பை பார்த்து விட்டால் கிரிட்டிஷிசம் போய்விடும் அதற்கு உதாரணமாக அபிஷனையும் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
இந்த படத்திற்கு பிரியமுடன் என்ற பெயரை தான் கேட்டோம் ஆனால் அது கொடுக்கப்படவில்லை தமிழில் பெயர் வைக்க தான் தங்களுக்கும் ஆசை ஆனால் இதுதான் அமைந்தது என தெரிவித்தார். டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் முடிந்தவுடன் அபிஷன் என்ன செய்யப் போகிறோம் என்று மன அழுத்தத்தில் இருந்தார் பெயர் சொல்லக்கூடிய பெரிய பெரிய ஹீரோக்கள் கூட அபியிடம் படம் செய்வதற்கு கேட்டார்கள் அதிலிருந்து ஒரு சிறு இடைவேளை ஆக கூட இந்த படத்தை பார்க்கலாம் என தெரிவித்தார்.

