இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு- கோவையில் வானதி சீனிவாசன் அளித்த பேட்டி

கோவை: தமிழக வெற்றி கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளது என்பது அபாண்டமான குற்றச்சாட்டு என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சுங்கம் பகுதியில் இந்திய கட்டிடக்கலை வல்லுனர்கள் குழுமம் சார்பில் கட்டிடக்கலை கண்காட்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது பிரதமர் மோடியின் சிந்தனையில் உருவான அற்புதமான திட்டம் என்றும் இந்தியாவிலேயே அதிகமான ஸ்மார்ட் சிட்டிகள் பெற்ற மாநிலம் தமிழ்நாடு அதிலும் கோவையில் ஏழு குளங்கள் சீரமைக்கட்டும் மேம்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என தெரிவித்தார்.

28ஆம் தேதி துணை குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கோவைக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பாஜக மற்றும் தனியார் அமைப்பு செய்து வருவதாக தெரிவித்தார்.

தமிழக பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா குறித்தான கேள்விக்கு, பல்கலைக்கழக நிலப்பரப்பை குறைத்து தான அந்த சட்ட மசோதாவை கொண்டு வந்தார்கள் என்றும், தேசிய கல்விக் கொள்கையை ஒரு புறம் எதிர்க்கிறார்கள் ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கக்கூடிய பல்வேறு விஷயங்களை எடுத்து புதிதாக கல்வி கொள்கை திட்டத்தில் செயல்படுத்துகிறோம் என்று திராவிட மாடல் அரசு கூறுவதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு கல்வியில் சிறந்தது என்று மாநாடு நடத்துகிறார்கள் ஆனால் அதேசமயம் பல்வேறு பள்ளிக்கூடங்கள் மூடப்படுகிறது, சமூக நீதி பேசுகின்ற திராவிட மாடல் அரசாங்கத்தில் சமூக நல நீதி விடுதிகள் மூடப்பட்டு வருகிறது, அதுதான் அவர்களது சாதனை என்று விமர்சித்தார்.

ஒரு மசோதாவை கொண்டு வருவதற்கு முன்பு கலந்துரையாடிக் கொண்டு வர வேண்டும் அவசரகதியில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதும் அதன் பிறகு கூட்டணி கட்சிகள் எல்லாம் கூறியதை அடுத்து அதனை வாபஸ் பெறுவதுமாக டிராமா அரசை நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழக கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாமல்லபுரத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது குறித்து சீமான் தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு, இந்த விவகாரத்தில் மற்றவர்கள் கூறி கருத்துக்குள்ளே செல்ல விரும்பவில்லை, கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் குறைந்தபட்சம் மக்களை பார்க்கிறார் என்பதே நல்ல விஷயம் தான் என தெரிவித்தார். சிபிஐ விசாரணை முடிந்து உண்மை வெளிவரும் பொழுது நீதி கிடைப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவித்தார்.

நெல் கொள்முதல் குறித்தான கேள்விக்கு மழைக்காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதால் விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் டெல்டா காரர் என்று முதல்வர் கூறி வரும் பொழுது டெல்டா விவசாயிகள் அதற்கு பதில் அளிக்க 2026 ஆம் ஆண்டிற்காக காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

PM SRI திட்டத்தில் தமிழ்நாடு கூடிய விரைவில் இணையும், கேரள மாநிலம் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று ஏற்றுக் கொண்டார்கள் தமிழக அரசும் இதனை ஏற்றுக் கொள்கின்ற காலம் நிச்சயம் வரும் என தெரிவித்தார். கல்வியில் அரசியலை கலக்க வேண்டாம் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை என கூறினார்.

SIR க்கு யார் யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்றும், அது 18 வயது ஆனவர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, ஒரு வாக்காளரின் பெயர் பல்வேறு தொகுதிகளில் இருந்தால் அதனை சரி பார்த்து நீக்க வேண்டும் இறந்தவர்களின் பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் யார் அந்த தொகுதியின் வாக்காளர்களோ அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் நோக்கம், ஆனால் எதிர்ப்பவர்கள் வேண்டுமென்றே வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்குகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் என்றும் தெரிவித்தார். வாக்காளர்கள் தற்பொழுது செல்போன் மூலமாகவே அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார். விமர்சனங்கள் செய்வதால் ஒவ்வொரு கட்சியின் கூட்டணிக்கு வருவதில்லை என்று கூறினால் தற்பொழுது எந்த கட்சியின் கூட்டணிக்கு வராது என்றும், செந்தில் பாலாஜியை பற்றி முதல்வர் திருடர் என கூறினார் தற்பொழுது செந்தில் பாலாஜி திமுக கட்சியில் இணைந்த பிறகு தியாகி என குறிப்பிடுகிறார் என தெரிவித்தார்.

அரசியலில் மாறி மாறி பேசுவதை மக்கள் ஏற்றுக் எப்படி பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு, அது வருத்தமாக தான் உள்ளது என்றும் அவ்வாறு பேச வேண்டிய சூழல் இருப்பதாகவும் கூறினார்.

தமிழக வெற்றி கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளது என்ற கருத்து அபாண்டமான குற்றச்சாட்டு என்றும் நாட்டில் அனைத்து கட்சிகளும் சுதந்திரமாக செயல்படலாம் என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் 800 அண்டாக்கள் பறிமுதல்- பறக்கும் படை அதிரடி…

கோவை: சூலூர் அருகே திமுகவினர் 800 சில்வர் அண்டாக்களை பதுக்கி வைத்திருந்த அதனுடன் சேர்த்து குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் விதிமுறைகளை...

Video

கோவையில் செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வடவள்ளி பகுதியில் செல்போன் வாங்குவது போல நடித்து, இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய...