இது தான் Boys Are Back; 55 ஆண்டுகளுக்குப் பின் சங்கமித்த கோவை ப்ளேயர்ஸ்!

கோவை: கோவையில் கடந்த 1970 காலகட்டங்களில் கிரிக்கெட் விளையாட்டில் தடம் பதிந்து வந்த வீரர்கள் 55 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து நெகிழ்ந்தனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த 1970 காலகட்டங்களில் பிரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் ராம் நகர் கிரிக்கெட் கிளப் ஆகிய இரண்டு கிளப்புகளில் விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள், 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தனர்.

காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில், உள்ளூர் கிரிக்கெட் கிளப்புகளின் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, கோவை மைதானங்கள் மற்றும் வீதிகளில் கிரிக்கெட் விளையாடியது, மறக்க முடியாத வெற்றிகள், தோல்விகள், சேட்டைகள், சண்டைகள், பழைய நட்புகள் குறித்த தங்கள் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

மேலும், தற்போதைய தங்கள் வாழ்க்கை முறை, குடும்பம், தொழில் தொடர்பான விவரங்களையும் பகிர்ந்தனர். பின்னர், காலமான சக வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த சந்திப்பின் மூலம் இளம் வயதில் ஓடி ஆடி விளையாடிய நண்பர்களைப் பார்த்து, அவர்களுடன் நேரம் செல்விட்டு, பேசி, ஒருவரை ஒருவர் புதுப்பித்துக் கொண்டனர் என்று கூறினால் அது மிகையாகாது.

Recent News

Video

Join WhatsApp