கோவை: கோவையில் இன்றைய தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
அக்ஷயதிருதியை பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வந்த சந்தம் விலை, பண்டிகை முடிந்த நிலையிலும் ஏறுமுகமாகவே இருந்தது.
இதனிடையே தங்கம் விலை இன்று திடீரென சரிந்துள்ளது.
கோவையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.9,015க்கும், ஒரு பவுன் ரூ.72,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோவையில் 18 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.7,435க்கும், ஒரு பவுன் ரூ.59,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.