5 கோடியை கடந்த வர்த்தகம்- விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை: 5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வரும் ‘தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்துள்ளது.

செஞ்சேரிமலை நந்தவன திருமட வளாகத்தில் நடைபெற்ற இந்நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டத்தில், ஈஷாவின் தொடர்ச்சியான வழிகாட்டுதலால் இந்த வளர்ச்சியை எட்ட முடிந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதில் இந்நிறுவனத்தின் தலைவர் கதிரேசன், இயக்குனர்களான ரவிச்சந்திரன் கருப்புசாமி, சிவகுமார் பழனிசாமி, கீதா சத்தியசீலன் மற்றும் ஈஷா அவுட்ரீச் சார்பில் சுவாமி நளதா,ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனத்தின் உறுப்பினர் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு பொது கூட்டத்தில் சமர்பிக்கப்பட்ட வர்த்தக ஆண்டறிக்கையின் படி 24-25 நிதியாண்டில் தேங்காய் மற்றும் இளநீர் வர்த்தகம் 5 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கடந்த 23-24 ஆம் நிதியாண்டில், 1.50 கோடி வர்த்தகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 24-25 நிதியாண்டில் மட்டும் வர்த்தகம் 220 சதவீதம் அபரிமிதமாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் கதிரேசன் கூறுகையில் இந்த பகுதி விவசாயிகள் அனைவருக்கும் நாம் விளைவிக்கிறோம், ஆனால் விலையை நம்மால் நிர்ணயிக்க முடியவில்லை, நம்முடைய பொருளுக்கு யாரோ ஒருவர் விலை நிர்ணயம் செய்கிறார் என்ற ஆதங்கம் இருந்தது. இதனை மாற்ற வேண்டும் என்ற தேடுதலில் இருந்த போது ஈஷா அமைப்பு எங்களுக்கு வரப்பிரசாதமாக வந்தது என்றே கூற வேண்டும்.

அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றாக எங்களையும் சேர்த்துக் கொண்டு உதவி செய்கின்றனர். விளைபொருள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் அவர்களின் வழிகாட்டுதல் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்கிறது எனக் கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் 90 பறக்கும் படைக்குழு அமைப்பு…

கோவை: கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 13,08,898 பேரும் பெண் வாக்காளர்கள் 14,05,246 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 532...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.