கோவையில் விபரீதம்; காவல் நிலையத்திற்குள் உயிரிழந்த நபர் – பரபரப்பு!

கோவை: கோவை கடைவீதி காவல் நிலையத்திற்கு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகர கடை வீதி காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் காவலர் செந்தில் குமார் அலுவல் நிமித்தமாக காவல் நிலையத்தின் முதல் மாடியில் உள்ள உதவி ஆய்வாளர் அலுவலகத்தை திறக்க முயற்சித்த போது, கதவு உள் இருந்து தாழ்ப்பாளிடப்பட்டு இருந்தது. சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்துப் பார்த்த போது, ஒரு நபர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து இருந்தது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர், தடய கைரேகை நிபுணர்கள் ஆகியோருடன் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

Advertisement

மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த
கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கோவை, பேரூர் ராமசெட்டிபாளையத்தைச் சேர்ந்த அறிவொளி ராஜன் (60) என்பதும், அவர் திருமணம் ஆகவில்லை என்றும், சென்டிரிங் பணியில் ஈடுபட்டு இருந்தவர் என்றும் தெரியவந்து உள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக அவருடைய மன நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், யாரோ ? தன்னை கொலை செய்ய வருகிறார்கள் எனக் கூறி இருந்ததாகவும், அவரது சகோதரி காவல் துறையினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 11.19 மணி அளவில் அவர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து உள்ளார், அங்கு பணியில் இருந்த காவலர் அவரிடம் விசாரிக்கையில், அவருடைய மன நிலை சரியில்லாததை உணர்ந்து, வெளியே அனுப்பிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இருப்பினும், அவர் மீண்டும் காவலருக்குத் தெரியாமல் காவல் நிலையத்தின் முதல் மாடிக்கு சென்ற காட்சிகளும் உள்ளது.

மாடிக்குச் சென்று அவர், உதவி ஆய்வாளர் அறையில் தாழ்ப்பாளிட்டு நாற்காலியின் உதவியுடன் வேட்டியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறும் போது,

புகார் கொடுக்க வந்த நபர் காவல் நிலையத்தில் உயிரிழந்து தற்கொலை தான் என்றும், லாக்கப் மரணம் கிடையாது என்றும், கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தவர், இறந்தவரின் குடும்பத்தினர் தகவல் கொடுத்து அவர்கள் வந்து கொண்டு உள்ளதாகவும் கூறினார்.

மேலும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும், பின்னர் அது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மேலும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp