கோவை: யானைகளை விவரப்படுத்தி ஐடி வைப்பதற்கான பயிற்சி கூட்டம் கோவையில் நடைபெற்றது…
கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிர்பயிற்சியகத்தில் யானைகளை விவரப்படுத்துதல் குறித்தான பயிற்சி வன சரகர்கள், வனப்பாப்பாளர்கள் வனபணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வனத்துறை கோவை கோட்டம் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி கூட்டத்தில் யானைகளின் உடல் அங்கங்களை வைத்து அவற்றிற்கு அடையாளம்(ID) வைப்பது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உட்பட பல்வேறு வனத்துறை அதிகாரிகள் பங்கேற்று விவரித்தனர். மேலும் அவர்களது வனத்துறை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
யானை மனித மோதலை தடுப்பது எப்படி? அங்குள்ள மக்களிடம் யானைகளின் சுபாவம் என்ன என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், யானைகளை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராடும் பொழுது எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக இந்த பயிற்சி கூட்டத்தில் யானைகளுக்கு பெயர்கள் வைப்பதை காட்டிலும் ID வைப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்ட இயக்குநர் அன்சர்தீன் கலந்து கொண்டார்.