Header Top Ad
Header Top Ad

கோவையில் வேரோடு சாய்ந்து பெண் மற்றும் குழந்தை மீது விழுந்த மரம்

கோவையில் அடித்து வீசிய சூறைக்காற்றால் வேரோடு சாய்ந்த வேப்பமரம்- இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்ற பெண் மீது விழுந்து படுகாயம் ஏற்பட்டது.

கோவை: கோவை, ஓணாம்பாளையம் கிரீன் ஹாம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ். இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் மூத்த மகள் பள்ளிக்குச் சென்ற நிலையில் இளைய மகள் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்.

இதை அடுத்து இன்று மாலை சுமார் 3.30 மணி அளவில் மூத்த மகளை அழைத்து வருவதற்காக, இளைய மகளுடன் அவரது இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

Advertisement

அப்பொழுது ஓணாப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் பழமையான வேப்பம் மரம் ஒன்று உள்ளது.

அப்பொழுது வீசிய சூறைக்காற்றால் அங்கு இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து மூத்த மகளை அழைக்க, இளைய மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கவிதா மீது விழுந்தது .

இதில் கவிதா மற்றும் அவரது இளைய மகளும் படுகாயம் அடைந்தனர். இதனைக் கண்டு அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பள்ளி முடிந்து செல்லும் நேரம் என்பதால் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சரி‌ செய்யப்படட்து.

குழந்தையுடன் சென்ற பெண் மீது மரம் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recent News