கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் முதியவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உக்கடம் பேருந்து நிலையத்தில் வயது முதிர்ந்த தம்பதியை ஆட்டோ டிரைவர் ஒருவர் தாக்குவது போல் நேற்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பரவியது. ‘முதியவர் மீது தாக்குதல், ஆட்டோ டிரைவர்கள் அராஜகம்’ என்ற தலைப்பில் வீடியோ வைரலானது.
இதனைப் பார்த்த உக்கடம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்தனர். அதில், முதிய தம்பதி தங்களுக்குள் சண்டையிட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அவர்களை அமைதியாக இருக்கும் படி கூறியும், தன்னை கெட்ட வார்த்தையால் திட்டியதால் ஆத்திரத்தில் அவரை தாக்கியதாக ஆட்டோ டிரைவர் ஒருவர் தெரிவித்தார்.
இதனையடுத்து முதிய தம்பதியை தாக்கியதாக செல்வபுரம் கல்லாமேடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முஸ்தபா(52) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே அந்த ஆட்டோ டிரைவர் என்ன காரணத்திற்கான மூதாட்டியை தாக்கினார் என்பது குறித்து விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

