நீட் 2026 க்கான அறிவிப்பு! எப்படி விண்ணப்பிப்பது…!

பலரின் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நினைவாக போகும் நீட் 2026 அப்டேட் வெளியாகியுள்ளது.

Advertisement

NEET UG 2026 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது, அதன்படி தேர்வு வரும் மே 3, 2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 8 2026 முதல் மார்ச் 8 2026 வரை நடைபெறுகிறது.

விண்ணப்ப செயல்முறையில் இந்த ஆண்டு முக்கிய மாற்றமாக ஆதார் அடிப்படையிலான இ கேஒய்சி சரிபார்ப்பு லைவ் புகைப்படம் எடுக்கும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோல விண்ணப்பங்கள் மற்றும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக NTA விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

கேள்வித்தாள்கள் physics, chemistry, Biology ஆகிய பாடங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். நீட் தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என்பதால் தமிழக மாணவர்களுக்கு இது சாதகமாக பார்க்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம்: ஜென்ரல் பிரிவுக்கு ரூபாய் 1700, OBC/EWS ₹1600, மற்றும் SC/ST/PwBD பிரிவினருக்கு ₹1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனிடையே நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் நீட் 2026 அறிவிப்பு தமிழக அரசியல் சூழலிலும் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது, ஒட்டு மொத்தமாக கடுமையான பாதுகாப்பு விதிகள் தெளிவான கால அட்டவணை மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான மாற்றங்களுடன் நீட் யூஜி 2026 தேர்வு நடைமுறைக்கு வந்துள்ளதாக கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Flipkart Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

இன்றைய ராசிபலன் (ஜூலை 29): தொழில், பணம், காதல், உடல்நலம் எப்படி?

ஜூலை 31-ம் தேதிக்கான 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம், கல்வி மற்றும் காதல் தொடர்பான இன்றைய ராசிபலன்களை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...