உக்கடத்தில் மூதாட்டியை தாக்கிய ஆட்டோ டிரைவர் மீது வழக்கு; டிரைவர் கொடுத்த விளக்கம் வீடியோ!

கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் முதியவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உக்கடம் பேருந்து நிலையத்தில் வயது முதிர்ந்த தம்பதியை ஆட்டோ டிரைவர் ஒருவர் தாக்குவது போல் நேற்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பரவியது. ‘முதியவர் மீது தாக்குதல், ஆட்டோ டிரைவர்கள் அராஜகம்’ என்ற தலைப்பில் வீடியோ வைரலானது.

Advertisement

இதனைப் பார்த்த உக்கடம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்தனர். அதில், முதிய தம்பதி தங்களுக்குள் சண்டையிட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அவர்களை அமைதியாக இருக்கும் படி கூறியும், தன்னை கெட்ட வார்த்தையால் திட்டியதால் ஆத்திரத்தில் அவரை தாக்கியதாக ஆட்டோ டிரைவர் ஒருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து முதிய தம்பதியை தாக்கியதாக செல்வபுரம் கல்லாமேடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முஸ்தபா(52) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதனிடையே அந்த ஆட்டோ டிரைவர் என்ன காரணத்திற்கான மூதாட்டியை தாக்கினார் என்பது குறித்து விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Flipkart Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

காலை 6 மணி ஷோ… கேக் வெட்டி கொண்டாடிய கோவை சூர்யா ரசிகர்கள்!

சூர்யாவின் ‘சீன்’ திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கத்தினர் மேளதாளம் முழங்க, கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...