கோவை: கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக இன்று (20.08.2025) கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், 58 வது வார்டுக்கு கோதாரி நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவில் தியான மண்டபத்திலும்,
கூடலூர் நகராட்சியில் 10,18 ஆகிய வார்டுகளுக்கு பி.ஆர்.கல்யாண மண்டபத்திலும், சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில் 1 முதல் 9 வரை உள்ள வார்டுகளுக்கு சர்க்கார் சாமக்குளம் ராகவேந்திர மஹாலிலும்,
ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவன்புதூர், பெரியபோது, வாழைகொம்புநாகூர் ஆகிய ஊராட்சிகளுக்கு திவான்சாபுதூரில் உள்ள விபிபி மஹாலிலும்,
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குள்ளிசெட்டிபாளையம், கபுலிபாளையம் ஊராட்சிகளுக்கு குள்ளிசெட்டிபாளையம் பிரிவிலுள்ள ஐஸ்வர்யா திருமண மண்டபத்திலும்,
புறநகர் பகுதியான பட்டணம் பகுதிக்கு பகவதி அம்மன் கல்யாண மண்டபத்திலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.