கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை நடைபெறவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்களை கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 10 ஆம் தேதி கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 22, 24 வது வார்டுகளுக்காக சேரன்மாநகரில் உள்ள VKR கல்யாண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.

Advertisement

வால்பாறை நகராட்சி 7, 8 ஆம் வார்டுகளுக்காக சோலையாறு அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி 1, 2, 3, 4, 5, 6, 7, 9 ஆகிய வார்டுகளுக்காக விவேகா திருமண மண்டபத்தில், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பூரண்டாம்பாளையம், வாரபட்டி ஊராட்சிகளுக்காக பாலாஜி கல்யாண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மத்வராயபுரம், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிகளுக்காக தோட்டராயன் கோவில் மஹாலில்,

Advertisement

குருடம்பாளையம் றநகர் பகுதிக்காக கே.வடமதுரையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தம் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறுகிறது.

தங்களது பகுதிகளில் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp