கோவையில் எங்கெல்லாம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்? என்னென்ன சேவைகள் – முழு விவரம்

கோவை: கோவையில் இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமில் என்னென்ன சேவைகள் வழங்கப்படுகின்றன, கோவையில் எங்கெங்கு, யார் யார் தலைமையில் நடைபெறுகின்றன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுமக்கள் குறைகள் மற்றும் சேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழக அரசு சார்பில் இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் மாதம் வரை வாரத்திற்கு 4 நாட்கள் தினமும் 6 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமில் நகர்ப்புறங்களில் 13 துறைகள் கீழ் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளின் கீழ் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன.

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதி ஆதரவு திட்டம்
கட்டட வரைபட அனுமதி
கைவினைத்திட்டம்
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்
மகளிர் சுய உதவிக்குழு கடன்
முதியோர், விதவை மாற்றுத்திறனாளி உதவித்தொகை
மகளிர் உரிமைத்தொகை

உள்ளிட்ட 43 சேவைகள் வழங்கப்பட உள்ளன.

Advertisement

100 நாள் வேலைத்திட்டம்
மகளிர் சுய உதவிக்குழு கடன்
பட்டா மாறுதல்
வேளாண் இடுபொருள்களுக்கான மானியம்
சிறு, குறு விவசாயக் கடன்
கட்டட வரைபடத்திட்ட அனுமதி
கைவினைத் திட்டம்
கடல்சார் கல்விக்கான உதவித்தொகை
50% மானிய மீன்பிடி உபகரணங்கள்
அலங்கார மீன் வளர்ப்பு
தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டம்
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்
முதியோர், விதவை மாற்றுத்திறனாளி உதவித்தொகை
பட்டியலின மற்றும் பழங்குடியினர் கல்வி உதவித்தொகை
நாட்டுக்கோழிப் பண்ணை திட்டம்
நல வாரிய உறுப்பினர்கள்
மகளிர் உரிமைத்தொகை

உள்ளிட்ட 45 சேவைகள் வழங்கப்பட உள்ளன.

மகளிர் உரிமைத்தொகை… யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

கோவையில் இன்று (ஜூலை 15ம் தேதி) முகாம் நடைபெறும் இடங்கள்:-

  • காமாட்சி அம்மன் கோவில் திருமண மண்டபம். வடவள்ளி – மாவட்ட ஆட்சித் தலைவர், மேயர்,மாநகராட்சி ஆணையாளர், மாமன்ற உறுப்பினர்கள்.
  • கருமத்தம்பட்டி கொங்கு திருமண மண்டபம் – கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்.
  • ஆலாந்துறை – சரவண மஹால் -மாவட்ட வருவாய் அலுவலர், பேரூராட்சி தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள்.
  • ஆனைமலை செந்தூர் மஹால் – பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்.
  • அன்னூர் அக்கரை செங்கப்பள்ளி VPRC மண்டபம் – கூடுதல் ஆட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள்.
  • மலுமிச்சம்பட்டி திவ்யா மஹால் –
  • மாவட்ட வருவாய் அலுவலர்

ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை வரை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த தகவலை கோவை மக்களுக்கு பகிர்ந்து உதவி செய்திடுங்கள்.

Recent News