கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

கோவை: கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் குறைகள் மற்றும் சேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் மாதம் வரை வாரத்திற்கு 4 நாட்கள் தினமும் 6 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமில் நகர்ப்புறங்களில் 13 துறைகள் கீழ் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளின் கீழ் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, கோவையில் நாளை (05.08.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் 13 வது வார்டுக்கு, வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஆதி கல்யாண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.

கூடலூர் நகராட்சியில் 9,11,12 வது வார்டுகளுக்கு பி.ஆர்.கல்யாண மண்டபத்திலும், கருமத்தம்பட்டி நகராட்சியில் 1, 2 வார்டுகளுக்கு கத்தோலிக்க தேவங்கர் திருமணமண்டபத்திலும் முகாம் நடைபெறுகிறது.

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 1,2,7,8,9,10,11,12 ஆகிய வார்டுகளுக்கு நரசிம்மநாயக்கன்பாளையத்திலுள்ள லட்சுமி கல்யாண மண்டபத்திலும்,

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் தேவராயபுரம், கோவிந்தபுரம், நம்பர் 10 முத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நம்பர் 10 முத்தூரில் உள்ள ஆர்.கே.என் மண்டபத்திலும்,

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் ராசக்காபாளையம், புளியம்பட்டி, வெள்ளாளபாளையம், கொண்டேகவுண்டன்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு வெள்ளாளப்பாளையம் விஜய மஹாலிலும் என மொத்தம் 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறவுள்ளன.

எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார்.

அமேசான் பிரைமில் இணைய கீழே சொடுக்கவும் 👇

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp