கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை (August 19) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக நாளை (19.08.2025) கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், 47 வது வார்டுக்கு ரத்தினபுரி சுந்தரம் வீதியில் உள்ள லாலா மஹாலிலும்,

வடக்கு மண்டலத்தில் 12வது வார்டுக்கு மணியக்காராம் பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவ் மஹாலிலும், கருமத்தம்பட்டி நகராட்சியில் 13,14,21 ஆகிய வார்டுகளுக்கு சோமனூர் சாய் மஹால் மண்டபத்திலும்,

பொள்ளாட்சி நகராட்சியில் 24,25,31 ஆகிய வார்டுகளுக்கு மஹாராஜா மஹாலிலும், சமத்தூர் பேரூராட்சியில் 1,4,5,6,8,9 ஆகிய வார்டுகளுக்கு சமத்தூர் ஜெய்சக்தி மஹால் அரங்கத்திலும்,

அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டம்பட்டி, குப்பேபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு கணேசபுரத்தில் உள்ள காளியப்பா கல்யாண மண்டபத்திலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

எனவே, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்..

உங்கள் தினசரி சக்தியை உயர்த்துங்கள் – ரிவைட்டல் உடன்! – Order Now

Order the Best Bluetooth Speakers Now! 🎶

Seasonal cotton wear, Sarees & Kurtis

Recent News

Video

Join WhatsApp