கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

கோவை: கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரத்தை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நாளை (13.08.2025) கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 46 மற்றும் 47 ஆகிய வார்டுகளுக்கு ரத்தினபுரி சுந்திரம் தெரு லாலாமஹால் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது.

Advertisement

பொள்ளாச்சி நகராட்சி 11,20,21 ஆகிய வார்டுகளுக்கு பல்லடம் சாலை பழனியப்பா மண்டபத்திலும், பேரூர் பேரூராட்சி 1,2,3,4,5,6,11,12 ஆகிய வார்டுகளுக்கு பேரூர் ராமலிங்க அடிகளார் அரங்கத்திலும் முகாம் நடைபெறுகிறது.

காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெள்ளாதி, சிக்காரம்பாளையம், ஜடையம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு பெள்ளாதி ஆர்.கே.கே.ஆர் மண்டபத்திலும்,

Advertisement

பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோமங்கலம்புதூர், கோமங்கலம், சீலக்காம்பட்டி, எஸ்.மலையாண்டிபட்டினம் ஆகிய ஊராட்சிகளுக்கு கோமங்கலம்புதூர் அருள்ஜோதி மஹாலிலும் முகாம் நடைபெறுகிறது.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர். இணைய இங்கே சொடுக்கவும் 👈

நீலாம்பூர், மயிலம்பட்டி சின்னியம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு அவிநாசி சாலை ஸ்ரீதேவி மகாலிலும் என மொத்தம் 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெர்வித்துள்ளார்.

Recent News

வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் பனை விதை பதிக்கும் பணி…

கோவை: கோவை வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் பனை விதைகள் பதிக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு பனை விதைகளை நட்டு வைத்தார். கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயற்கை வளங்கள் மற்றும்...

Video

கோவை அருகே கொட்டகையை உடைத்து உள்ளே நுழைந்த யானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த மாட்டு தீவனங்களை காட்டு யானை தின்று சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை,...
Join WhatsApp